Posts

Showing posts from March, 2023

Sanmargam undead life

Image
 Some sages say to do nothing and "just sit". In Sanmargam, Jiva olukkam, boodha olukkam, Karana olukkam, Soul olukkam prescribe various moral rules, and sages like Vallala Peruman tell them to do them. Should we just do nothing? Or should we do what scientists like Vallalar say? We ask for grace to remove this confusion. Answer by Yogi Adalarasan Iyya :- To achieve "jeevan mukti" i.e. samsara dukka nivarti, one must "be idle" without doing anything. But if you want to achieve deathless long life, you have to follow the moral rules of Jiva morality, Karana morality, Buddha morality, Soul morality and change the impure body, pure body, Pranava body, and wisdom light body. In this the sadhakas of lazy nature strive to attain Jeevan Mukti leave their house. By becoming a renunciate and not taking a bath, not wearing good clothes, they live on alms and attain Jivan Mukti. They should do nothing. To be idle. Even for food you have to beg and eat. Do not touch ...

இல்லறம் வழியில் இறைநிலை அடைந்த வள்ளலார்

 வீட்டைவிட்டு வெளியேறி தேசாந்திரியாக திரியும் நோக்கத்தோடு தன்னுடைய பால்யவயது நண்பர் ரத்தினமுதலியார் என்பவருடன் வடலூர் ராமலிங்க வள்ளல் பெருமான் சென்னை ஏழுகிணறு பகுதியில் அப்போது தவவாழ்வு வாழ்ந்த சிவயோகி விபூதிசித்தர் என்பவரிடம் சென்று கலந்தாலோசித்தார். விபூதிசித்தர்மேல் பெருமதிப்பு கொண்டு பழகிவந்த வள்ளல் பெருமானுக்கு" உன் வீட்டு பெரியவர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் நற்குணவதியான பெண்ணை திருமணம் செய்துகொள்" என ஆலோசனை வழங்கினார் விபூதி சித்தர் . "நீ மரணமிலா பெருவாழ்வடைய விரும்பினால் தேசாந்திரியாக திரியும் சாமியார்வாழ்க்கை ஒருபோதும் உதவாது.அது ஆன்ம ஞானத்தையும், ஜீவன்முக்த தன்மையையும் வழங்குமேயன்றி மரணமிலாபெருவாழ்வை அடையும் நோக்கத்தோடு பிறந்துள்ள உனக்கு ஒருசிறிதும் உதவாது. திருமணம் செய்துகொண்டு உன் மனைவியாக வரவிருக்கும் அப்பெண்ணிடம் உரிமையோடு வாசியோகத்தைப்பற்றி பேசி புரிந்துகொள்ளச்செய். சொத்துசுகத்துடன்,காமத்தை அனுபவித்து பிள்ளைகளை பெற்றுக்கொண்டு வாழ்ந்து மடிவதற்க்கும், சிவயோகசித்தியெலாம் பெற்று மரணமிலாபெருவாழ்வடைவதற்காக கணவனும்,மனைவியுமாக சேர்ந்து முயற்ச்சிப்பதற்கும் உள்ள...

மனம் அடங்கும் தியானம் வாசியோக கல்வி

 அன்புள்ள குருநாதா ! உள்ளுணர்வு , விழிப்புணர்வு, ஞானம், தியானம், வாசியோகம், கடவுள் இவைகளை குறித்து பல முறை உங்கள் சிந்தனைகள் மூலம் விளக்கம் பெற்றுள்ளேன். இருப்பினும், இன்னும் மனம் தெளிவடையாமல், பல சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கிறது. இவைகளை பற்றி தெரிந்து கொள்வதைவிட, நேரிடையாக இவைகளை உணர்ந்து கொள்ள வழி ஒன்றும் இல்லையா ? குருநாதரின் பதில் :-- இருப்பை உணர்ந்து கொள்ள எளிமையான தசகாரிய வாசியோக தியான வழி  ஒன்றுஉள்ளது. அதை விளக்கமாக எடுத்து சொல்வதில்  எந்தத் தடையும் இல்லை. ஆனால் எவருமே அதை, பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள தயங்குகிறார்கள். உன்னிடம் அந்த தியான முறையை சொல்கிறேன். அதற்கு முன்,  அதை பற்றிய ஒரு உதாரணம். வீட்டில், சமையல் முடிந்த பின் அந்த சமைத்த பாத்திரங்களை, எளிதாக சுத்தம் செய்து விடுவார்கள் இல்லத்தரசிகள். எப்போதாவது, அரிதாக ஒரு நிகழ்வு நடக்கும். இல்லத்தரசிகள், பால், அல்லது காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து விட்டு, இடைப்பட்ட நேரத்தில் முக்கியமான, அவசரமாக வேறு வேலையில் கவனம் செலுத்தி,  அடுப்பில் வைத்து பாத்திரத்தை மறந்து போய் விடுவார்கள். காய் க...

மனித பிறப்பின் நோக்கம் என்ன?

 வெளி வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை வைத்து அதை ஆன்மீகம் என்று முடிவு செய்ய முடியாது. *ஆன்மீகம்_ என்பது*... *உங்கள் ஆன்மா சார்ந்த விஷயங்களை வாசி யோக சாகா கல்வி மூலம் எந்த அளவுக்கு கற்றுள்ளீர்கள் என்பதாகும். வாசியோக சாகா கல்வியை கற்பதன் மூலம் நீங்கள் அகவினத்தாராக உண்மையிலேயே மாற்றம் அடையும் பொழுது உங்கள் உள்மையத்தில் அன்பு நிலைக்கொண்டிருக்கும்,வெளியேயும் நீங்கள் அன்பாய் இருக்க முடியும் உள்ளே அமைதி நிலை கொண்டிருந்தால், வெளி நிலை தானே வசப்படும். உள்மையத்தில் விழிப்புணர்வு இருந்தால், உங்கள் வாழ்வில் தூய்மை பிரகாசிக்கும்.  வெளியே மாற்றங்கள் செய்யத் தொடங்கினால், அது உங்கள் உள்ளே எந்த மாற்றத்தையும் உருவாக்காது. ஆனால்,உள்ளே மாற்றம் நடந்தால் வெளியிலும் தானே மாற்றம் ஏற்பட்டுவிடும். காரணம்,வெளிப்புறம் என்பது உங்கள் நிழலாகும். நிழலில் மாற்றம் செய்தால் உள்ளே எந்த மாற்றமும் ஏற்படாது*.   வெளிப்புறம் மாற்றங்கள் செய்யும் முயற்சியில், ஜனங்கள் வாழ்வை வீணடித்துக் கொள்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. தங்கள் பழக்கவழக்கங்ளை மாற்றிக்கொள்ள பெரிய அளவில் சிரமங்...

கடவுள்நிலை என்று சைவ சமயமும் வள்ளல் பெருமானும் கூறுவது எது ?

 இறப்பு என்பது இயற்கை! சாகாமல் இருக்க வேண்டும் என்று அலைபவன் முட்டாள் என்று கூறப்படுகிறதே! மரணமில்லா பெருவாழ்வு இயற்கைக்கு எதிரானதா? இப்பூவுலகில் தோன்றிய ஒவ்வொரு பொருளும் மறைந்து தான் ஆக வேண்டும் என்பது இயற்கை விதி. ஆனால் மரணமில்லா பெருவாழ்வு தான் ஒரு ஜீவன் பெற்றுக் கொள்ளுகின்ற கடவுள்நிலை என்று சைவ சமயமும் வள்ளல் பெருமானும் கூறுவது ஏன்?  பதில்:- மனிதர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிறிதளவு ஆறாம் அறிவு ஆகிய பகுத்தறிவை கொடுத்ததற்கே இந்த அளவு ஆணவத்தால் போராடுகிறார்கள். இந்த உலகையே படைக்கும் வல்லமை உடைய இறைவனுக்கு எவ்வளவு பெரிய ஞானம் இருந்திருக்க வேண்டும். அதுதான் பேரறிவு முற்றறிவு என்று சொல்கின்றோம்.  நாய் குட்டி நாய் ஆகின்றது. பூனை குட்டி பூனை ஆகின்றது. குதிரை குட்டி குதிரை ஆகின்றது. அவ்வாறே கடவுளுடைய குட்டி ஆகிய நாம் கடவுளாக நிலை மாற்றமடைய வேண்டும். அதற்கு பேரறிவு தேவை. அதையே மெய்ஞானம் என்கிறோம். அந்த மெய்ஞானத்தை அடைய முடியாத பொய் ஞானத்தை உடைய முட்டாள்கள் பேசும் பேச்சு தான் மரணம் இயற்கை என்பது. நீங்கள் ஜீவன்முக்தர் களையும் சித்தர்களையும் மட்டுமே பார்த்து அவர்களுடைய கர...

பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன் சதாசிவன் இவர்களின் ஆயுள் என்ன?

 கொசு ,நாய், பூனை போன்றவற்றிற்கு ஆயுள் இருப்பதைப்போல் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன் சதாசிவன் இவர்களுக்கும் ஆயுள் இருக்கின்றது என்று கூறும் தலைசுற்ற வைக்கும் நம் முன்னோர்களின் அற்புதமான காலக் கணக்கீடு  15 கண்ணிமைப் பொழுது - ஒரு காட்டை 30 காட்டை - கலை 30 கலை - முகூர்த்தம் 30 முகூர்த்தம் - நாள் 15 நாள் - பக்கம் 2 பக்கம் - மாதம் 2 மாதம் - இருது 3 இருது - அயனம் 2 அயனம் - வருடம் (தேவர்க்கு ஒரு நாள்) 4,32,000 வருடம் - கலியுகம் 8,64,000 வருடம் - துவாபரயுகம் 12,96,000 வருடம் - திரேதாயுகம் 17,28,000 வருடம் - கிருத யுகம் 43,20,000 வருடம் - மகாயுகம், 4 யுகம், (தேவயுகம் 12,000 தேவருடம்) 30,67,20,000 வருடம் - 71 மகாயுகம், மனுவின் காலம், (மன்வந்தரம் 8,52,000 தேவ வருடம்) ஒரு இந்திரன் ஆயுள் 4,29,40,80,000 வருடம் - 994 மகாயுகம், 14 மனுக்கள், 14 இந்திரர்கள் 2,59,20,000 வருடம் - 6 மகாயுகம் (இரண்டு சந்திகள்) 4,32,00,00,000 வருடம் - 1000 மகாயுகம் 1 கற்பம், பிரம்மாவின் பகல் 8,64,00,00,000 வருடம் - 2 கற்பம், பிரமம் நாள் 360 பிரம்ம நாள் - பிரமம் வருடம் 100 பிரம்ம வருடம் - பிரமம் ஆயுள் - விண்டு...

சித்தர்களும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் கடைபிடித்த முக்தி எது?

 பணம் உங்களிடம் நிறைய இருக்குமேயானால் வெளிசூழ்நிலையில் உங்கள் இஷ்டத்திற்க்கு தக்கபடி சௌகரியமாக வாழலாம் அதாவது உங்கள் பணம் ,உங்களுக்கு போரடிக்காமல் பெறாக்கு காட்டும்.ஊட்டிக்கு சுற்றுலா செல்லவேண்டுமா, பணமிருந்தால் உடனே பெறாக்காக போய்வரலாம் இவ்வுலகில் பணம் மட்டும் உங்கள் கையில் நிறைய இருக்குமேயானால் நீங்கள் நினைத்ததை செய்துகொண்டு., உண்டு, உறங்கி வசதியாக வாழலாம் இக்காரணத்தாலேயே ஏறக்குறைய அனைவரும் பணத்தை தேடி அலைகின்றனர். பணம் நமக்கு சுதந்திரம் தருவது போல் தெரிகிறது.படைத்தலின் மூலமான கடவுளைத்தேட நாம் நிர்பந்திக்கப்படுவதில்லை. ஆனால் உடலை, மனதை சுகமாக வைக்க நாம் நிர்ப்பந்தம் செய்யப்படுகிறோம்.ஓரளவு படித்து காசு சம்பாதித்து நம்மை அதிபுத்திசாலி என நினைக்க வைக்கும் அகங்காரத்திற்க்கு இதனால் நல்ல தீனி கிடைத்து அது திடப்படுகிறது இந்த முடிவிற்கு வந்த அனைவரும் பகுத்தறிவு வாதிகளாகி விடுகின்றனர். கடவுள்,கோயில்,குரு,ஆன்மீகம்,பிரமச்சரியம் அனைத்தும் கேட்க கூசும் கெட்ட வார்த்தை ஆகிவிடுகிறது ஆனால் உண்மையில் இத்தவறான முடிவை அறியாமையால்,ஆழ்ந்து சித்திக்காமல் தன்னிச்சையாக எடுத்து பணத்தை சம்பாதித்து சுகமாக வ...

ஆன்மிகம் கடவுள் என்பது என்ன?

 வெளி வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை வைத்து அதை ஆன்மீகம் என்று முடிவு செய்ய முடியாது. *ஆன்மீகம்_ என்பது*... *உங்கள் ஆன்மா சார்ந்த விஷயங்களை வாசி யோக சாகா கல்வி மூலம் எந்த அளவுக்கு கற்றுள்ளீர்கள் என்பதாகும். வாசியோக சாகா கல்வியை கற்பதன் மூலம் நீங்கள் அகவினத்தாராக உண்மையிலேயே மாற்றம் அடையும் பொழுது உங்கள் உள்மையத்தில் அன்பு நிலைக்கொண்டிருக்கும்,வெளியேயும் நீங்கள் அன்பாய் இருக்க முடியும் உள்ளே அமைதி நிலை கொண்டிருந்தால், வெளி நிலை தானே வசப்படும். உள்மையத்தில் விழிப்புணர்வு இருந்தால், உங்கள் வாழ்வில் தூய்மை பிரகாசிக்கும்.  வெளியே மாற்றங்கள் செய்யத் தொடங்கினால், அது உங்கள் உள்ளே எந்த மாற்றத்தையும் உருவாக்காது. ஆனால்,உள்ளே மாற்றம் நடந்தால் வெளியிலும் தானே மாற்றம் ஏற்பட்டுவிடும். காரணம்,வெளிப்புறம் என்பது உங்கள் நிழலாகும். நிழலில் மாற்றம் செய்தால் உள்ளே எந்த மாற்றமும் ஏற்படாது*.   வெளிப்புறம் மாற்றங்கள் செய்யும் முயற்சியில், ஜனங்கள் வாழ்வை வீணடித்துக் கொள்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. தங்கள் பழக்கவழக்கங்ளை மாற்றிக்கொள்ள பெரிய அளவில் சிரமங்...

வள்ளலார் சொன்ன ஒழுக்கம் என்னென்ன??

 ஒன்றும் செய்யாமல் "சும்மாயிரு" என்று சில ஞானிகள் சொல்கிறார்கள். சன்மார்க்கத்தில் ஜீவ ஒழுக்கம், பூத ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்றெல்லாம் பல்வேறு ஒழுக்க விதிகளை விதித்து ,வள்ளல் பெருமான் போன்ற மெய்ஞானிகள் அவற்றை செய்யச் சொல்கிறார்கள். நாங்கள் எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டுமா? அல்லது வள்ளலார் போன்ற விஞ்ஞானிகள் சொல்வதை செய்ய வேண்டுமா? இந்த குழப்பத்தை நீக்கி அருள வேண்டுகிறோம். யோகி ஆடலரசன் ஐயா அவர்களின் பதில் :-  சம்சார துக்க நிவர்த்தி ஆகிய "ஜீவன் முக்தியை" அடைய வேண்டுமானால் எதுவும் செய்யாமல் "சும்மா இருக்க" வேண்டும். ஆனால் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய வேண்டுமானால் ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம், பூத ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்ற ஒழுக்க விதிகளை கடைபிடித்து அசுத்த தேகத்தை, சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான ஒளி தேகமாக மாற்றம் அடையச் செய்ய வேண்டும்.  இதில் சோம்பேறி தனம் உள்ள சாதகர்கள் ஜீவன் முக்தியை அடைய பாடுபடுகிறார்கள். அவர்கள் வீட்டை . துறந்து துறவியாகி குளிக்காமல், நல்ல உடை உடுத்தாமல், பிச்சை எடுத்து வாழ்ந்து ஜீவன் முக்தியை அடைகிறார்கள். அவ...

ஆன்மீகமும் உடலின் அறிவியலும்

 உலகம் இன்னும் உடலைப்பற்றிய அறிவியலையே தாண்டாத போது நமது பாரதமோ உயிரைப் பற்றிய அறிவியலை வழங்கிச் சென்றுள்ளது.  ஆனால் நாமோ வெள்ளையனுக்கு வால்பிடிப்பதை கைவிடவில்லை.  மனித உடலானது பருவுடல் என்றும் நுண்ணுடல் என்றும் இரு உடல்களை கொண்டுள்ளது. ஆன்மீகத்தில் நான்கு உடலாகவும் கூறுவது உண்டு.  பருவுடல் பஞ்ச பூதங்களால் ஆனது.  நுண்ணுடல் மனம், புத்தி, அகங்காரத்தினால் ஆனது.  இவை இரண்டையும் இயக்குவது உயிர் ஆகும்.  பருவுடலில் வாத பித்த கப வடிவில் கழிவுகள் தேங்கினால்... உடலில் ஏற்படும் நோய்.  ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்கள் மனதில் தேங்கினால் மனநோய்.  நோய் என்பது முதலில் அஹங்காரத்தில் வருகிறது. இரண்டாவது உடலிலும் மனதிலும் வருகிறது. இந்த அஹங்காரமே நாம் ஆவோம்.  உடல் என்பது நாம் அல்ல. உடல் என்பது ஜடப்பொருள் மட்டுமே.  உடலை உயிரானது உயிர்சக்தியைக் கொண்டு இயக்குகிறது. உயிரே உடலை பாதுகாத்து பராமரிக்கிறது.  உணவின் மூலம் கிடைக்கும் உயிர்சத்தையும் சுவாசம் மூலம் கிடைக்கும் உயிர்க்காற்றையும் எரிக்கும்போது உயிர்சக்தி கிடைக்கிறது. அதுவே வெப்பமாக நமக்கு வெளி...

சாகா கல்வியின் மூன்று வகை முக்தி எது ?

Image
  ஓம் நமசிவாய! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அனைத்து முக்தர்களுக்கும், சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் தனிப்பெரும் தலைவனான பிரபஞ்ச தலைவன் சிவபெருமானை வணங்கி மகிழ்வோம்! எல்லா உயிரும் சிவபெருமான் நேரடியாக முன் நின்று அளித்த தசகாரிய வாசி யோக சாகா கல்வி கற்று, இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க! கொல்லா நெறியே எல்லா நெறிகளுக்கும் உயர்ந்த நெறி! மேன்மைமிக்க சைவ சன்மார்க்க நீதி விளங்குக உலகமெல்லாம்! விஞ்ஞானபூர்வமான சைவ சன்மார்க்கம் உலகெங்கும் பரவுவதற்கு இதனுடைய விஞ்ஞானபூர்வமான தன்மைகளை எடுத்துரைத்து உண்மைச் சரியை கிரியை யோக ஞானத்தில் நடை இட்டு சிவத்தொண்டு செய்வோம் வாரீர்! போலியான உபாயச்சரியை, கிரியை, யோக, ஞானத்தை தவிர்த்து உண்மையான விஞ்ஞானபூர்வமான தசகாரிய வாசி யோகம் பயின்று மரணமில்லா பெருவாழ்வு அடைவது ஒன்றே நம் முன் நிற்கும் ஒரே வழி! மரணமில்லா பெருவாழ்வு என்பது கருவி ஆகிய நம் உடலை நாமே அசெம்பிள் செய்ய கற்றுக் கொள்வதும் தேவையில்லாத போது பிரித்துப் போட கற்றுக் கொள்வதும் ஆகும். இவ்வாறு நம் உடலை நாமே பிரித்து போடவும் அசெம்பிள் செய்யவும் கற்பதற்கான கல...

சிற்றம்பலக்கல்வி மற்றும் சாகா கல்வி பயிற்சி பற்றிய விளக்கங்கள்

Image
  சிற்றம்பலக்கல்வி மற்றும் சாகா கல்வி பயிற்சி பற்றிய விளக்கங்கள் :- வள்ளலார் காட்டும் உண்மையான வாசி யோகம் என்பது ஊனினை உருக்கி உள் ஒளியை பெருக்கி உங்களையே நம்பி உங்கள் உடலில் வாழும் 100 கோடி செல்களையும் ஓஜஸ் எனும் ஒளி ஆற்றல் நிரம்பச் செய்து சாகாமல் காப்பதே ஆகும். இவ்வாறு செய்பவரே உண்மையான சன்மார்க்கி. இதுவே வள்ளலார் கூறும் அகவினத்தார் ஆக உருமாற்றம் அடைதல். அகவினத்தாருக்கு மரணமிலா பெரு வாழ்வையும், பரோபகாரம் மட்டும் செய்யும் புறவினத்தாருக்கு ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் பரிபக்குவம் அடைவதற்கு தேவையான உதவிகளை செய்வோம், என்று வள்ளல் பெருமான் தனது கடைசி உபதேசத்தில் கூறியுள்ளதையும் நாம் காணவேண்டும் சாகாதவனே சன்மார்க்கி, சாகின்றவன் சுத்த சன்மார்க்க நிலையை பெற்றவன் அல்ல என்று வள்ளல் பெருமான் கூறி உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். வள்ளல் பெருமானும், சைவசமய நால்வர் பெருமக்களும், சப்தரிஷிகளும், பதினெண் சித்தர் பெருமக்களும் கடைபிடித்த வாசி யோகம் என்பது தசகாரிய வாசி யோகம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வாசி யோகம் என்பது செத்த வித்தை சட்ட விதிகள் கூறும் ஒரு பயிற்சி அல்ல என்...

யோகி ஆடலரசன் ஐயாவின் உண்மையான வாசியோக அழைப்பு

Image
  ஒரே வார்த்தையில் கூறுவதானால் நாங்கள் ஒரு விடும் "அழைப்பு" யாரெல்லாம் தங்களை தொலைத்துவிட்ட ஆழ்ந்த ஏக்கத்துடன் தங்களைத் தாங்களே கண்டுபிடிக்காவிட்டால் வாழ்வு அர்த்தமின்றி போய்விடும் என்று ஆழமான உந்துதல் உடன் தேடிக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு நாங்கள் ஒரு அழைப்பு! அந்தத் தேடல்தான் உங்கள் முழு முதல் தேவையாக, முதலும் கடைசியுமான தேவையாக இருக்குமேயானால், அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம் ஆனால் அதை இழக்க முடியாது என்று இருக்குமேயானால் அப்பர் பெருமானும், வள்ளல் பெருமானும் இணைந்து முன் நின்று நடத்துகின்ற சைவ சன்மார்க்கம் உங்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு!!! உடல் நிலையில் பல்வேறு தேவைகள் இருக்கின்றன. மன நிலையில்ஆயிரம் ஆயிரம் ஆசைகள் உள்ளன. ஆனால் உங்கள் ஆன்மாவின் ஏக்கத்தை பொறுத்தவரை ஒன்றே ஒன்றுதான் அதன் லட்சியம். தன் இருப்பிடம் திரும்பி விடுவது, தன் உண்மை நிலையை கண்டு பிடிப்பதுதான் உங்கள் ஆன்மாவின் ஒரே லட்சியம். அதை அடைவதற்கு சைவ சன்மார்க்க தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சி வகுப்பும், வாழ்வியல் நெறியும் ஒரு அற்புதமான வாய்ப்பு. ஆன்மாவின் ஏக்கத்தை நிறைவு செய்ய துடிப்பவர்களுக்...

ஆடலரசன் ஐயா தெய்வங்களிடம் மக்களை நேரடியாக பேச வைத்த விழா

Image
  தசகாரிய வாசியோகம் என்னும் சாகா கலை உயர் திரு ஆசான் ஆடலரசன் ஐயா அவர்கள் நடத்தும் சாகா கலை கல்வி . இந்த கல்வி விஞ்ஞான பூர்வமானது.இதை ஒவ்வொருவரும் தன் அனுபவத்தில் உணர முடியும் நாம் பொதுவாக இந்த பூலோகத்தில் தொலைவில் உள்ளவரிடம் பேச போன் பயன்படுத்துகிறோம் ஆனால் வேற்று கிரகத்தில் உள்ளவர்களிடம் பேச சாதனம் இன்னும் முழுமையாக இல்லை ஆனால் வெறும் 50 ரூபாய் செலவில் வேற்று கிரகவாசிகள், சித்தர்கள், மகான்கள், தெய்வங்கள் எங்களிடம் தெளிவாக ஒலியாக பேசியதை கேட்டு நாங்கள் அனைவரும் பிரமித்து போனோம். இது மாயமோ மந்திரமோ இல்லை . முழுக்க முழுக்க அறிவியல். அடுத்து வேற்றுகிரகவாசிகளை நேரில் பார்க்கும் முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. கூடிய விரைவில் அவர்களை நாங்கள் அனைவரும் காண போகிறோம் மேலும் பிறவிகளை ஒழித்து தெய்வ நிலை அடைந்து ஒளி உடலை பெறும் கல்வியை கற்க போகிறோம். இந்த வாய்ப்பு உங்களையும் தேடி வருகிறது . எக்காரணம் கொண்டும் தவற விடாதீர்கள் .இதன் மூலம் உங்களுக்குள் எல்லையற்ற ஆனந்தம் பரிபூரணமாக குடி கொள்ளும் என்பதை ஆணி தரமாக என்னால் கூற முடியும். - திரு ராஜ்மோகன். பரமக்குடி. (யோகி ஆடலரசன் ஐயா நடத்திய த...

அப்பர் பெருமான் சொன்ன சாகாக்கல்வி என்பது என்ன ?

Image
  தமிழர்களுடைய மரபுக் கல்வியான (அறக்கல்வியான) சாகா கல்வியை அப்பர் பெருமானிடமும் வள்ளல் பெருமானிடமும் நேரடியாக 12 வருடங்கள் பயின்று தேறியுள்ள பல் மருத்துவராக இருந்து சித்தராக நிலை உயர்த்தப்பட்டுள்ள யோகி ஆடலரசன் ஐயா அவர்கள் ஆற்றிய சாகா கல்வி ஏன் பயில வேண்டும் என்பது பற்றிய வீடியோ இங்கு உங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளையர்களுடைய மெக்காலே கல்விமுறை வெறும் பொருள் கல்வி. பொருளை சம்பாதித்து அதை வைத்து இன்பம் அடைந்து அனுபவித்து விட்டு செத்துப் போ என்று சொல்கின்ற பொருள் கல்வியை கற்று வீணாகிக் கொண்டிருக்கின்ற தமிழர் சமுதாயம் சாகா கல்வியை கற்று கடவுள் தன்மை அறிந்து அம்மயமாக, கடவுளாகவே உருவாக முன்வர வேண்டும். டாக்டர் , இன்ஜினியர் என்பதெல்லாம் ஒரு பதவி. அதைப்போல் கடவுள் என்பதும் ஒரு பதவி என்பதை நமது குருநாதர் யோகி ஆடலரசன் ஐயா அவர்கள் விஞ்ஞானபூர்வமாக ஆதாரம் பூர்வமாக எடுத்துரைக்கிறார். சிவபெருமானே முன் நின்று சைவ சமய நால்வர் பெருமக்களுக்கும், வள்ளல் பெருமானுக்கும் கற்றுக் கொடுத்த தசகாரிய வாசி யோக கல்வியே தமிழர்களுடைய மரபுக் கல்வி அதுவே நமக்கு இறுதியான விடுதலையை ,இகபர சௌபாக்கியங்க...

வாகீசர் தசகாரிய வாசியோக சாகா கல்வி பயிற்சி மையம்

Image
  அப்பர் சுவாமிகள் நேரிடையாக நமது ஆசான் யோகி ஆடலரசன் ஐயாவிற்கு காட்சி கொடுத்து சாதாரண செங்கல்லை தங்கமாக மாற்றி ரசவாதம் புரிந்த திருவண்ணாமலை அருகே அமைந்துள்ள மிகப்பெரிய ஆன்மீக தலமான திருகோவிலூர்(அரகண்டநல்லூர்) என்னும் நகரத்தில் அப்பர் பெருமானுக்கு மிக சக்தி வாய்ந்த ஒரு ஆலயமும், மக்களிடையே இந்த சாகா கல்வியை பரப்புவதற்காக அகில உலக சைவ சன்மார்க்க முன்னேற்ற கழகம் என்ற அமைப்பும், வாகீசர் தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சி மையம் என்ற அமைப்பும் அமைய இருக்கின்றது. அதற்கான ஆலயம் மற்றும் ஆசிரம கட்டுமான பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. சிவபெருமானே நேரடியாக முன் நின்று தனது மனைவி பார்வதிக்கும், சப்த ரிஷிகளுக்கும் தன்னுடைய மகன்களுக்கும் சொல்லிக் கொடுத்த அற்புதமான சாகா கலையாகிய தசகாரிய வாசி யோக சாகா கல்வியை, (தமிழர்களுடைய மரபுக் கல்வியான இந்த சாகா கல்வியை மறுபடி உயிரூட்டி) பொதுமக்களுக்கு எடுத்துச் சென்று மறுபடியும் தமிழர்களுடைய ஆட்சி உலகெங்கும் பரவுவதற்கு ஒரு விதையாக இந்த அமைப்புகள் உருவாக இருக்கின்றன. விஞ்ஞானபூர்வமாக அஷ்டகர்ம சித்தி , அஷ்டமா சித்திகளை எல்லாம் நிரூபித்து உலகை தமிழருடைய மெய்ஞானத்...

நாரதர் சஞ்சரித்த 3 உலகம் எது ?

Image
  வாசியோகத்தின் மூலம் தான் மூன்று உலகங்களிலும் சஞ்சரிக்கக்கூடிய வல்லமை நாரதர் போன்ற ரிஷிகளுக்கு இருந்ததாக படித்துள்ளோம்.அந்த 3உலகம் என்பது எது? அவை எங்கிருக்கின்றன? பதில் :- மூன்று வகையான உலகங்கள் உள்ளன.தனிம உலகம் ,தாவர உலகம், விலங்கு உலகம். விலங்கு உலகம் அதன் உணவிற்கு அடிப்படையில் தாவர உலகத்தை நம்பி இருக்கிறது.தாவர உலகம் தம் உணவுக்கு அடிப்படையில் தனிம உலகத்தை நம்பி இருக்கிறது. ஒரு விலங்கு எப்பபடி பிறக்கிறது எப்படி வாழ்கிறது என்று நமக்கு தெரியும்.ஒரு தாவரம் எப்படி விதையிலிருந்து முளைவிடுகிறது, எப்படி வாழ்கிறது என்று நமக்கு தெரியும்.ஆனால் ஒரு தனிமம் (தங்கம்,இரும்பு போன்ற உலோகங்கள்) எப்படி உருவாகின்றது? எப்படி வாழ்கின்றது என்று யாருக்கும் தெரியாது. இதுவரை கண்டறியப்பட்ட114 தனிமங்களையும் உருவாக்கியது யார்?தாவர உலகுக்கும்,விலங்கு உலகுக்கும் அவை உருவாகுவதற்கு அடிப்படைக் காரணம் தனிம உலகமே, அதாவது அணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகளாகின்றன.மூலக்கூறுகள் சேர்ந்து சேர்மமாகிறது, சேர்மங்கள் சேர்ந்து கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பாக உருவாகிறது. இம் மூன்றின் கலவையே தற்போது நாம் காணும் ஜீவராசிகளி...