சித்தர்களும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் கடைபிடித்த முக்தி எது?
பணம் உங்களிடம் நிறைய இருக்குமேயானால் வெளிசூழ்நிலையில் உங்கள் இஷ்டத்திற்க்கு தக்கபடி சௌகரியமாக வாழலாம்
அதாவது உங்கள் பணம் ,உங்களுக்கு போரடிக்காமல் பெறாக்கு காட்டும்.ஊட்டிக்கு சுற்றுலா செல்லவேண்டுமா, பணமிருந்தால் உடனே பெறாக்காக போய்வரலாம்
இவ்வுலகில் பணம் மட்டும் உங்கள் கையில் நிறைய இருக்குமேயானால் நீங்கள் நினைத்ததை செய்துகொண்டு., உண்டு, உறங்கி வசதியாக வாழலாம்
இக்காரணத்தாலேயே ஏறக்குறைய அனைவரும் பணத்தை தேடி அலைகின்றனர்.
பணம் நமக்கு சுதந்திரம் தருவது போல் தெரிகிறது.படைத்தலின் மூலமான கடவுளைத்தேட நாம் நிர்பந்திக்கப்படுவதில்லை.
ஆனால் உடலை, மனதை சுகமாக வைக்க நாம் நிர்ப்பந்தம் செய்யப்படுகிறோம்.ஓரளவு படித்து காசு சம்பாதித்து நம்மை அதிபுத்திசாலி என நினைக்க வைக்கும் அகங்காரத்திற்க்கு இதனால் நல்ல தீனி கிடைத்து அது திடப்படுகிறது
இந்த முடிவிற்கு வந்த அனைவரும் பகுத்தறிவு வாதிகளாகி விடுகின்றனர்.
கடவுள்,கோயில்,குரு,ஆன்மீகம்,பிரமச்சரியம் அனைத்தும் கேட்க கூசும் கெட்ட வார்த்தை ஆகிவிடுகிறது
ஆனால் உண்மையில் இத்தவறான முடிவை அறியாமையால்,ஆழ்ந்து சித்திக்காமல் தன்னிச்சையாக எடுத்து பணத்தை சம்பாதித்து சுகமாக வாழ கிளம்பிய மனிதன் பின்னர் வேலையில் டென்ஷன்,Bp,அல்சர்,கேன்சர்,லொட்டு லொசுக்கு என அவதிப்படுவதை காண்கிறோம்
பின் இப்பிரச்சனையிலிருந்து அவர்களை மீட்க தேவதூதர்கள்,அவதார புருஷர்கள் தேவைப்படுகிறார்கள்
எனவே பிரச்சனைகளை உருவாக்கும் நாமேதான் நம்முயற்ச்சியால் குருஉபதேசத்தை கேட்டு,கடைபிடித்து உண்மையை உணர்ந்து நம் தவறுகளை திருத்திக்கொண்டு, ஞானமடைந்து முக்தியை அடைய வேண்டும்
இல்லை, நான் என் இஷ்டப்படி தான் வாழ்வேன், நீ யார் எனக்கு அறிவுரை சொல்வதற்க்கு?உனக்கும் என்னை மாதிரியே இரண்டு கை, கால்,கண்,காது,மூக்கு, ஒரு தலை தானே உள்ளது என குருமார்களிடமே எதிர்த்து பேசினால் அவர்களை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது!!!
நீங்கள் மலர்வதைத் தடுப்பது உங்கள் பிடிவாதமே என நீங்கள் உணரும் நாள்தான் உங்கள் வாழ்க்கையில் பொன்நாள்!!!
பணிந்தால் பரலோகம்!!!
எதிர்த்தால் எமலோகம்!!!
அனைத்து சித்தர்களும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் கடைபிடித்து முக்தி அடைந்த தசகாரிய வாசி யோகத்தை கற்பது மட்டுமே உண்மையான பணிவு. அந்த பணிவு இருந்தால் நீங்களும் மரணமில்லா பெரு வாழ்வை அடையலாம் என்பதை கீழ்காணும் வீடியோவில் தெள்ளத் தெளிவாக யோகி ஆடலரசன் ஐயா அவர்கள் குறிப்பிடுவதை காணலாம்.
https://www.youtube.com/live/u4KsSU4lzHM?feature=share
- யோகி ஆடலரசன் ஐயா.
நிறுவனர்:- அகில உலக சைவ சன்மார்க்க முன்னேற்ற கழகம் மற்றும் வாகீசர் தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சி மையம். திருக்கோவிலூர்.
Cell- 8675371212
Comments
Post a Comment