Posts

Showing posts from March, 2024

ஆண் பெண் முக்தி நிலை அடைய தியானம் செய்ய வேண்டும்

 ஆணின் சலிப்பிற்குப் பெண்ணும் காரணமல்ல;  பெண்ணின் சலிப்பிற்கு ஆணும் காரணமல்ல.  இந்த மனச் சலிப்பு, அதாவது -- ஏமாற்றத்தை உணர, உளவியலின் ஆழத்திற்குச் செல்ல வேண்டும்.  ஏதாவது ஒன்றை நீங்கள் எதிர் பார்த்திருந்தால்தான், ஏமாற்றம், மனச் சலிப்பு, போதும் போதுமென்ற வெறுப்பு உருவாகும்.  எதிர்பார்ப்பு எதுவும் இல்லையென்றால், மனச்சலிப்பு எப்படி வரும்? பெண்களின் ஏமாற்றத்திற்குக் காரணமே, அவர்கள் ஆண்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதுதான்.  பாவம்! ஆண்களால் பெண்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவே முடியவில்லை.  பெண்களுக்குக் கற்பனை அதிகம்.  சாதாரண ஆண்மகனையும் அவர்கள் கதாநாயகன் ஆக்கி விடுகிறார்கள்.  சாதாரண மடையர்கள் கூட, அவர்களின் கற்பனைக் கண்களுக்கு பெரிய அறிவாளி போல் தெரிகிறார்கள்.  அவர்களை மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்க்கும்போது, அந்த, மாமனிதர்கள் சாதாரண மனிதர்கள் ஆகி விடுகிறார்கள்.  அதனால்தான் ஏமாற்றம்.  எதையும் பெரிதாகக் கற்பனை செய்து கொள்வதால் வரும் விவகாரம் அது.  கற்பனையிலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா, என்ன?  இன்றோ நாளையோ எதார்த்த ...

மனித படைப்பின் நோக்கம் மரணம் இல்லா பெறுவாழ்வு என்றால் என்ன?

 இறப்பு என்பது இயற்கை! சாகாமல் இருக்க வேண்டும் என்று அலைபவன் முட்டாள் என்று கூறப்படுகிறதே! மரணமில்லா பெருவாழ்வு இயற்கைக்கு எதிரானதா? இப்பூவுலகில் தோன்றிய ஒவ்வொரு பொருளும் மறைந்து தான் ஆக வேண்டும் என்பது இயற்கை விதி. ஆனால் மரணமில்லா பெருவாழ்வு தான் ஒரு ஜீவன் பெற்றுக் கொள்ளுகின்ற கடவுள்நிலை என்று சைவ சமயமும் வள்ளல் பெருமானும் கூறுவது ஏன்?  பதில்:- மனிதர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிறிதளவு ஆறாம் அறிவு ஆகிய பகுத்தறிவை கொடுத்ததற்கே இந்த அளவு ஆணவத்தால் போராடுகிறார்கள். இந்த உலகையே படைக்கும் வல்லமை உடைய இறைவனுக்கு எவ்வளவு பெரிய ஞானம் இருந்திருக்க வேண்டும். அதுதான் பேரறிவு முற்றறிவு என்று சொல்கின்றோம்.  நாய் குட்டி நாய் ஆகின்றது. பூனை குட்டி பூனை ஆகின்றது. குதிரை குட்டி குதிரை ஆகின்றது. அவ்வாறே கடவுளுடைய குட்டி ஆகிய நாம் கடவுளாக நிலை மாற்றமடைய வேண்டும். அதற்கு பேரறிவு தேவை. அதையே மெய்ஞானம் என்கிறோம். அந்த மெய்ஞானத்தை அடைய முடியாத பொய் ஞானத்தை உடைய முட்டாள்கள் பேசும் பேச்சு தான் மரணம் இயற்கை என்பது. நீங்கள் ஜீவன்முக்தர் களையும் சித்தர்களையும் மட்டுமே பார்த்து அவர்களுடைய கர...

பதஞ்சலி மகரிசி

 *பதஞ்சலி* பதஞ்சலி ஒரு அரிய மனிதர். புத்தரைப் போலவே, கிருஷ்ணரைப் போலவே, கிறிஸ்துவைப் போலவே; மகாவீரர், முகமது (மற்றும்) ஜராதுஷ்டிரரைப் போலவே அவரும் ஒரு ஞானமடைந்த மனிதர். ஆனால் ஒருவிதத்தில் அவர் வேறுவிதமாக இருக்கிறார். புத்தர், கிருஷ்ணர், மகாவீரர். ஜராதுஷ்டிரர், முகமது ஆகிய எவரிடமும் ஒரு அறிவியல் அணுகுமுறை இருக்கவில்லை. அவர்கள் மாபெரும் மதங்களை நிறுவினார்கள். மனித மனத்தின் மற்றும் அதன் கட்டமைப்பின் மொத்த வடிவமைப்பையும் அவர்கள் மாற்றி இருக்கிறார்கள். ஆயினும் அவர்களின் அணுகுமுறை அறிவியல் ரீதியானது அல்ல.  புத்தர்களின் மத்தியில் ஒரு ஐன்ஸ்டீனைப் போல விளங்குகிறார் பதஞ்சலி. அவர் ஒரு விசேச நிகழ்வுதான். ஒரு ஐன்ஸ்டீன், போர், மாக்ஸ் பிளாங்க் அல்லது ஐசன்பர்க்கைப் போல் அவரும் எளிதில் நோபல் பரிசு பெற்றிருக்கமுடியும். ஒரு கறாரான அறிவியல் ரீதியிலான மனத்துக்குரிய அதே கண்ணோட்டத்தை, அதே அணுகுமுறையை அவர் பெற்றிருக் கிறார். கிருஷ்ணன் ஒரு கவிஞன். பதஞ்சலியோ கவிஞரல்லர். மகாவீரர் ஒரு ஒழுக்கவாதி. பதஞ்சலியோ ஒழுக்கவாதி அல்லர் அடிப்படையில் அவர் ஒரு அறிவியலாளர். விதிகளின் அடிப்படையில் சிந்திக்கிறவர். மேலும் ...