பதஞ்சலி மகரிசி

 *பதஞ்சலி*


பதஞ்சலி ஒரு அரிய மனிதர். புத்தரைப் போலவே, கிருஷ்ணரைப் போலவே, கிறிஸ்துவைப் போலவே; மகாவீரர், முகமது (மற்றும்) ஜராதுஷ்டிரரைப் போலவே அவரும் ஒரு ஞானமடைந்த மனிதர்.


ஆனால் ஒருவிதத்தில் அவர் வேறுவிதமாக இருக்கிறார். புத்தர், கிருஷ்ணர், மகாவீரர். ஜராதுஷ்டிரர், முகமது ஆகிய எவரிடமும் ஒரு அறிவியல் அணுகுமுறை இருக்கவில்லை.


அவர்கள் மாபெரும் மதங்களை நிறுவினார்கள். மனித மனத்தின் மற்றும் அதன் கட்டமைப்பின் மொத்த வடிவமைப்பையும் அவர்கள் மாற்றி இருக்கிறார்கள்.


ஆயினும் அவர்களின் அணுகுமுறை அறிவியல் ரீதியானது அல்ல. 


புத்தர்களின் மத்தியில் ஒரு ஐன்ஸ்டீனைப் போல விளங்குகிறார் பதஞ்சலி. அவர் ஒரு விசேச நிகழ்வுதான்.


ஒரு ஐன்ஸ்டீன், போர், மாக்ஸ் பிளாங்க் அல்லது ஐசன்பர்க்கைப் போல் அவரும் எளிதில் நோபல் பரிசு பெற்றிருக்கமுடியும்.


ஒரு கறாரான அறிவியல் ரீதியிலான மனத்துக்குரிய அதே கண்ணோட்டத்தை, அதே அணுகுமுறையை அவர் பெற்றிருக் கிறார்.


கிருஷ்ணன் ஒரு கவிஞன். பதஞ்சலியோ கவிஞரல்லர்.


மகாவீரர் ஒரு ஒழுக்கவாதி. பதஞ்சலியோ ஒழுக்கவாதி அல்லர் அடிப்படையில் அவர் ஒரு அறிவியலாளர். விதிகளின் அடிப்படையில் சிந்திக்கிறவர்.


மேலும் மனித இருத்தலின் அறுதி விதிகளை, மனித மனமும் உண்மை நிலையும் இயங்கும் அறுதியான செயல்பாட்டு அமைப்பை வகுத்தெடுக்க வருகிறார் அவர்.


மேலும் பதஞ்சலியை நீங்கள் பின்பற்றினால் எந்த ஒரு கணித வாய்ப்பாட்டையும் போலவே அவரும் துல்லியமானவர் என்பதை நீங்கள் அறிய வருவீர்கள்.


அவர் சொல்வதை துளியும் பிசகாமல் பின்பற்றுங்கள், பலன் கிடைக்கும். பலன் கிடைத்தே ஆக வேண்டும்.


இரண்டும் இரண்டும் நான்கு என்பதைப் போன்றதே இது.


தண்ணீரை நூறு டிகிரி வரை சூடேற்றினால் அது ஆவியாவதைப்போன்றதே இது. எவ்வித நம்பிக்கையும் தேவையில்லை.


நீங்கள் உள்ளே சென்று பார்த்தாலே போதும் அறிந்து கொள்கிறீர்கள். உள்ளே சென்று பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று இது. எனவேதான் இதற்கு ஈடு இணை இல்லை என்கின்றேன்.


இந்தப் புவியில் பதஞ்சலிக்கு இணையான ஒரு மனிதர் ஒருபோதும் இருந்ததில்லை.


புத்தரின் வசனங்களில் நீங்கள் கவிதையைக் காணமுடியும். அவை கவிதையாகவே இருக்க முடியும். பல சமயங்களில் புத்தர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போது அவர்தானே கவிதையாக ஆகிவிடுகிறார். அது பரவசத்தின் பிரதேசம். இறுதியை அறியும் பிரதேசம் அவ்வளவு அழகானது.


ஆனால் பதஞ்சலி அந்தச் சோதனைக்கு உட்படுவதில்லை. இது மிகவும் கடினம்தான். வேறு ஒருவராலும் தாக்குப்பிடித்து நிற்க முடிந்ததில்லை.


யேசு, கிருஷ்ணன், புத்தர் யாவரும் கவிஞர்கள் ஆகிறார்கள். அந்த மகத்துவம், அந்த அழகு உங்களுக்குள் வெடிக்கை யில் நீங்கள் ஆடத் தொடங்குகிறீர்கள், பாடத் தொடங்குகிறீர்கள்.


அந்த நிலையில் மொத்த பிரபஞ்சத்துடனும் காதல் கொண்டிருக்கும் ஒரு காதலராகவே நீங்கள் இருக்கிறீர்கள்.


பதஞ்சலி இதற்கு வசப்படாது மீறி நிற்கிறார். அவர் கவிதை மொழியைப் பயன்படுத்துவதில்லை. ஒரே ஒரு கவிதைக்கும் அவருக்கும் எவ்வித ஒட்டும் உறவும் இல்லை. அழகின் மொழியில் அவர் பேசமாட்டார்.


கணித மொழியிலேயே அவர் பேசுவார். அவர் கறாரானவர். அவர் உங்களுக்கு உண்மைகளை மட்டுமே தருவார். அந்த மூதுரைகள், என்ன செய்ய வேண்டும் என்பதற்கான கட்டுரைகள் மட்டுமே.


பரவசத்தால் அவர் பொங்கிப் பெருக மாட்டார். (வார்த்தைகளால்) சொல்ல முடியாத விசயங்களை அவர் சொல்ல மாட்டார் முடியாதவற்றை அவர் முயற்சிக்க மாட்டார்.


அடிப்படையை அவர் வகுத்தளித்து விடுவார், அவ்வளவே. அந்த அடிப்படையை நீங்கள் பின்பற்றினால் *அப்பாலின் சிகரத்தை நீங்கள் அடைவீர்கள்*.


பதஞ்சலி ஒரு துல்லியமான கணித இயலாளர்.


தசகாரிய வாசி யோக சாதகர்களான அப்பர் பெருமான் வள்ளல் பெருமான் போன்ற உயர்நிலை குருமார்களும் அவர்கள் வழிகாட்டலில் படித்துக் கொண்டிருக்கும் நாமும் பதஞ்சலி முனிவர் அமைத்த நடராஜர் வழிவந்த சைவ சித்தாந்த அறிவியலாளர்களே! 


-யோகி ஆடலரசன்.

நிறுவனர்:-

சைவ சன்மார்க்க முன்னேற்ற கழகம் மற்றும் வாகீசர் தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சி மையம். திருக்கோவிலூர் செல் 8675371212.

-

Comments

Popular posts from this blog

மனித படைப்பின் நோக்கம் மரணம் இல்லா பெறுவாழ்வு என்றால் என்ன?

பரியங்க யோகம்

யோக விஞ்ஞானம் வாசியோகம்