மனிதனின் உள்நோக்கிய பயணம் தியானம்
ஆணின் சலிப்பிற்குப் பெண்ணும் காரணமல்ல; பெண்ணின் சலிப்பிற்கு ஆணும் காரணமல்ல. இந்த மனச் சலிப்பு, அதாவது -- ஏமாற்றத்தை உணர, உளவியலின் ஆழத்திற்குச் செல்ல வேண்டும். ஏதாவது ஒன்றை நீங்கள் எதிர் பார்த்திருந்தால்தான், ஏமாற்றம், மனச் சலிப்பு, போதும் போதுமென்ற வெறுப்பு உருவாகும். எதிர்பார்ப்பு எதுவும் இல்லையென்றால், மனச்சலிப்பு எப்படி வரும்? பெண்களின் ஏமாற்றத்திற்குக் காரணமே, அவர்கள் ஆண்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதுதான். பாவம்! ஆண்களால் பெண்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவே முடியவில்லை. பெண்களுக்குக் கற்பனை அதிகம். சாதாரண ஆண்மகனையும் அவர்கள் கதாநாயகன் ஆக்கி விடுகிறார்கள். சாதாரண மடையர்கள் கூட, அவர்களின் கற்பனைக் கண்களுக்கு பெரிய அறிவாளி போல் தெரிகிறார்கள். அவர்களை மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்க்கும்போது, அந்த, மாமனிதர்கள் சாதாரண மனிதர்கள் ஆகி விடுகிறார்கள். அதனால்தான் ஏமாற்றம். எதையும் பெரிதாகக் கற்பனை செய்து கொள்வதால் வரும் விவகாரம் அது. கற்பனையிலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா, என்ன? இன்றோ நாளையோ எதார்த்த ...