உண்மை தேடல் எது?
பிறரை வேடிக்கை பார்,
என்ன செய்கிறார்கள் என்று பார்...
நிழல்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
*தமக்குத் தேவையே இல்லாதவற்றை*,
*விரட்டிப் பிடிக்க முயற்சி செய்கிறார்கள்*.
வெகு பிரயத்தனப்பட்டு ஒன்றை அடைய முயல்கிறார்கள்...
அப்படியே அதை அடைந்துவிட்டாலும்,
அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.
அப்படியாக ஒன்றைத் தேடித்தான்,
அவர்களுடைய அத்தனை ஓட்டமும்...
அப்படித்தான் பணத்தைத் தேடி...
அரசியல் அதிகாரத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
கைக்குக் கிடைத்தால்,
அதை வைத்துக்கொண்டு
என்ன செய்வது என்பது தெரியாமல் போய்விடுகிறது...
ஒருத்தி, இன்னொருத்தியிடம்...
" உன் வீட்டுக்காரரைப் பத்தி உனக்கு அக்கறையே இல்லையா ? என்றாள்.
பெண்களுக்குப் பின்னாலேயே
சுத்திக்கிட்டு இருக்கிறாரே...
எந்தப் பெண் என்றாலும் சரிதான்...
உனக்கும்தான் தெரியுமே " என்றாள்.
அவளோ சிரித்துக் கொண்டாள்.
" இதிலென்ன இருக்கிறது ?
நாய்கள் காருக்குப் பின்னால் குரைச்சுக்கிட்டு ஓடுவது போலத்தான்...
அவர் பெண்களுக்குப் பின்னாலே
சுத்தறது என்றாள்.
முதலாமவள்...
" நீ என்ன சொல்றேன்னு எனக்குப் புரியலயே
நாய்கள் காரைத் துரத்துறது போலவா ? என்றாள்...
அவள் ஆமா ஆமா...
நாய்க்குக் கார் கிடைச்சுட்டுதுன்னு வெச்சுக்கோ...
அதெ வெச்சுக்கிட்டு
அது என்ன செய்ய முடியும் ?
அப்படித்தான் அவரும்...
🌸பெண்களுக்குப் பின்னாடியே போய்
அவளைப் புடிச்சுக்குவார்...
அப்புறம் அவள வெச்சுக்கிட்டு
என்ன பண்றதுன்னு
அவருக்குத் தெரியாது.
🌸அவரைப் பத்தி எனக்குத் நல்லாத் தெரியும்,
அதனாலத்தான் கவலையேபடாம இருக்கேன் என்றாள்.
🌸அப்படித்தான்...
புகழ் பெற்ற ஒருவனாக வேண்டும் என்று வாழ்நாள் முழுக்க...
அதற்கே செலவு செய்வது,
🌸புகழ் வந்தபின் அதை வைத்துக்கொண்டு
என்ன செய்வது என்பது தெரிவதில்லை.
🌸புகழ் பெற்றவனாக ஆகிவிட்ட எவரும்,
அந்தப் புகழை,
எப்படியாவது புகழே இல்லாதபடி...
ஆக்கிவிடத்தான் விரும்புகிறான்.
🌸புகழ், அப்படி ஒரு சுமையாகிப் போகிறது...
சாவகாசமாக இருக்க முடியாது.
🌸கூட்டம் உன்னைக் கவனிக்காமல்
எங்கேயும் போக முடியாது...
தனிமையே இருக்காது.
தனிப்பட்ட வாழ்வை வாழவே முடியாது.
🌸எல்லோரும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்களே...
உன்னுடைய வாழ்வை அலசிப் பார்க்கிறார்களே....
சிரிக்க முடியாது.
இயல்பாக பேச முடியாது.
🌸எல்லாமும் சிரமமாகிப் போகிறது.
🌸புகழ் பெற்றவனாகும் போது
சொந்த வாழ்வென்பது இல்லாமல்
போய் விடுகிறது...
🌸ஒரு நாட்டின் ஜனாதிபதி அல்லது நோபல் பரிசு வாங்கியவர் எனும்போது,
தனிமனிதன் இல்லாமல் போய் விடுகிறான்.
🌸அலங்காரப் பொம்மையாகிப் போகிறான்.
எப்போதும் அலங்காரமாகவே
இருந்து தொலைக்க வேண்டியிருக்கிறது.
சிறு அசைவும் சாத்தியமில்லை.
எனவே இந்த பைத்தியக்காரத்தனமான மாய வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைய வேண்டுமானால் நீங்கள் தசகாரிய வாசி யோக பயிற்சியை செய்து இந்த பாடத்திட்டத்தையும் படித்து அஷ்டகர்ம சித்தி அஷ்டாங்க யோக சித்தி அஷ்டமா சித்தி ஆகியவற்றை அடைந்து தான் தீர வேண்டும்.
அதுவரை நம்மை இறைவன் விட போவதில்லை நம்முடைய அனுமதி இறைவனுக்கு தேவையும் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டு பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். இந்த வாசியோக பாடத்தில் கவனம் செலுத்துங்கள். அது ஒன்றுதான் தீர்வு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
-யோகி ஆடலரசன்.
திருக்கோவிலூர்.
Comments
Post a Comment