Posts

Showing posts from January, 2024

சாப்பாடு தூக்கம் மூச்சு மரணம் இவற்றை வெல்வதற்கான வழி தான் வாசியோகம்

 சாப்பாடு, தூக்கம், மூச்சு, மரணம் இவற்றை அருள்பவர் கடவுளா? இவற்றை வெல்லும் வழி தான் வாசியோகமா ?  அல்லது இவற்றை வெல்ல அருள் செய்பவர் கடவுளா? உண்மை கடவுள் என்பவர் சாப்பாடு தூக்கம் மூச்சு மரணம் இவற்றை வெல்வதற்கான அறிவை கொடுப்பவர். ஆனால் இங்கு அனைத்து மதங்களும் காட்டும் கடவுளர்கள் மேய்ப்பவராகவோ அல்லது இரட்சகராகவோ, ருசியான சாப்பாடு கொடுப்பவராகவோ, சொகுசாக தூங்குவதற்கு நல்ல வசதியான வீடு, வேலை, மனைவி சொத்து சுகங்களை கொடுப்பவராகவோ சித்தரிக்கப்படுகிறார்கள். புலன் இன்பநோக்கத்திற்கு துணை செய்பவர் கடவுளா? புலன்களை வென்று நாமே கடவுளாவதற்கு துணை செய்பவர் கடவுளா? வள்ளலார், அப்பர் , சிவ பெருமான் ஆகியோரெல்லாம் பசி, தூக்கம், மூச்சு, மரணம் போன்றவற்றை வென்று நாமே கடவுளாவதற்கு தேவையான அறிவை நமக்கு அளிக்கும் குருமார்களாக செயல்பட்டார்கள் ! ஆனால் சோறு போடும் வள்ளலாரை பிடிக்கும் மக்களுக்கு சாப்பாடு, தூக்கம், மூச்சு மரணத்தை வெல்வதற்கு தேவையான ஞானத்தை கொடுக்கும் வள்ளலாரை பிடிப்பதில்லை! சாப்பாடு, தூக்கம், மூச்சு, மரணம் இவை அனைத்து மத மக்களுக்கும் தேவை. இது உண்மைக்கடவுள் அமைத்த கம்பெனி செட்டிங். நாம் உயிர்...