Posts

மனிதனின் உள்நோக்கிய பயணம் தியானம்

 ஆணின் சலிப்பிற்குப் பெண்ணும் காரணமல்ல;  பெண்ணின் சலிப்பிற்கு ஆணும் காரணமல்ல.  இந்த மனச் சலிப்பு, அதாவது -- ஏமாற்றத்தை உணர, உளவியலின் ஆழத்திற்குச் செல்ல வேண்டும்.  ஏதாவது ஒன்றை நீங்கள் எதிர் பார்த்திருந்தால்தான், ஏமாற்றம், மனச் சலிப்பு, போதும் போதுமென்ற வெறுப்பு உருவாகும்.  எதிர்பார்ப்பு எதுவும் இல்லையென்றால், மனச்சலிப்பு எப்படி வரும்? பெண்களின் ஏமாற்றத்திற்குக் காரணமே, அவர்கள் ஆண்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதுதான்.  பாவம்! ஆண்களால் பெண்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவே முடியவில்லை.  பெண்களுக்குக் கற்பனை அதிகம்.  சாதாரண ஆண்மகனையும் அவர்கள் கதாநாயகன் ஆக்கி விடுகிறார்கள்.  சாதாரண மடையர்கள் கூட, அவர்களின் கற்பனைக் கண்களுக்கு பெரிய அறிவாளி போல் தெரிகிறார்கள்.  அவர்களை மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்க்கும்போது, அந்த, மாமனிதர்கள் சாதாரண மனிதர்கள் ஆகி விடுகிறார்கள்.  அதனால்தான் ஏமாற்றம்.  எதையும் பெரிதாகக் கற்பனை செய்து கொள்வதால் வரும் விவகாரம் அது.  கற்பனையிலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா, என்ன?  இன்றோ நாளையோ எதார்த்த ...

ஏழையின் மதம் பணக்காரனின் மதம்

 *ஒரு ஏழையின் மதத்திற்கும்*, *ஒரு பணக்காரனின் மதத்திற்கும்* *அடிப்படையில் ஒரு வித்தியாசம் உண்டு*. ஒரு ஏழை, மதத்தில் ஆர்வமுள்ளவனாக இருந்தால், அது வெறும் மாற்றுதான் (Substitute). அவன் கடவுளைப் பிரார்த்தித்தால்,  *அது தன் பொருளாதார மேம்பாட்டிற்காகவே இருக்கும்*. ஒரு மனிதனின் உண்மையான அடிப்படைத் தேவை, இன்னும் அவனிடம் ஏற்படவில்லை. ஏழைகளைப் பொறுத்தவரையில், மார்க்ஸ் மிகவும் சரியே. மதம், மக்களுக்கு போதைப்பொருள் போன்றது என்று அவர் சொன்னது ஒரு வகையில் சரியே. ஏனெனில் அவர்களால் தங்களுடைய வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை. ஆகவே, அதற்கு மாற்றாக பிரார்த்தனை, தியானம், யோகா மற்றும் மதம் முதலானவற்றைக் கையாளுகிறார்கள். ஆனால், பணக்காரனைப் பொறுத்தவரையில், அவனிடம் அடிப்படை மாற்றம் இருக்கிறது. அவன் இப்பொழுது பொருளாதார மேம்பாட்டைக் கேட்கவில்லை. *அவன் இப்பொழுது* *வாழ்வின்* *அர்த்தத்தைக் கேட்கிறான்*. கிருஷ்ணர், மஹாவீரர், புத்தர் மற்றும் சமண மதத்தின் 24 தீர்த்தங்கரர்கள், இந்து மதத்தின் 24 அவதாரங்கள் அனைவரும் பணக்கார மக்களே. அவர்கள் எல்லாம் அரச குடும்பத்தில் பிறந்தவர்...

உண்மை தேடல் எது?

 பிறரை வேடிக்கை பார், என்ன செய்கிறார்கள் என்று பார்... நிழல்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். *தமக்குத் தேவையே இல்லாதவற்றை*, *விரட்டிப் பிடிக்க முயற்சி செய்கிறார்கள்*. வெகு பிரயத்தனப்பட்டு ஒன்றை அடைய முயல்கிறார்கள்...  அப்படியே அதை அடைந்துவிட்டாலும், அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. அப்படியாக ஒன்றைத் தேடித்தான், அவர்களுடைய அத்தனை ஓட்டமும்... அப்படித்தான் பணத்தைத் தேடி... அரசியல் அதிகாரத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கைக்குக் கிடைத்தால், அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது தெரியாமல் போய்விடுகிறது... ஒருத்தி, இன்னொருத்தியிடம்... " உன் வீட்டுக்காரரைப் பத்தி உனக்கு அக்கறையே இல்லையா ? என்றாள். பெண்களுக்குப் பின்னாலேயே சுத்திக்கிட்டு இருக்கிறாரே... எந்தப் பெண் என்றாலும் சரிதான்... உனக்கும்தான் தெரியுமே " என்றாள். அவளோ சிரித்துக் கொண்டாள். " இதிலென்ன இருக்கிறது ?  நாய்கள் காருக்குப் பின்னால் குரைச்சுக்கிட்டு ஓடுவது போலத்தான்...  அவர் பெண்களுக்குப் பின்னாலே சுத்தறது என்றாள். முதலாமவள்...  " நீ என்ன சொல்றேன்னு எனக்குப் புரியலயே ...

திருக்கடையூர் சிவபெருமானின் அட்ட வீரட்டேஸ்வரர் தலம்

Image
சிவபெருமானின் அட்ட வீரட்ட தலங்களில் திருக்கடையூரும் ஒன்றாகும்.  நாகை மாவட்டம் பொறையாறு அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.  இங்கு மூலவர் அமிர்தகடேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருந்து அருள்புரிந்து வருகிறார்.  எமனை உதைத்த காலசம்ஹார மூர்த்திக்கு தனி சன்னிதி உள்ளது. அம்பாளின் திருநாமம் அபிராமி. பிரம்மா, ஞான உபதேசம் பெற வேண்டும் என சிவபெரு மானிடம் வேண்டினார். அதற்கு சிவபெருமான், பிரம்மாவிடம் வில்வ விதை ஒன்றைக்கொடுத்து இந்த விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு நீ என்னை வழிபடு என்றார்.  சிவபெருமான் கட்டளைப்படி பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப்பார்த்தார். திருக்கடவூரில் தான் வில்வ விதையில் இருந்து முளை வந்தது. இதனால் இந்தப்பகுதிக்கு வில்வவனம் என்ற பெயர் ஏற் பட்டது. சாகாவரம் தரும் அமிர்தத்தை பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தனர்.  அப்போது வெளிப்பட்ட அமிர்தத்தை அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாத தேவர்கள் அதை குடத்தில் வைத்து எடுத்துக்கொ...

திருக்கோவிலூர் சிவனின் அட்டவீரட்டேஸ்வரர் தல வரலாறு

Image
தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்களில் ஒன்றான திருக்கோவிலூர். சிவனின் அட்டவீரட்டேஸ்வரர் தலங்களில் ஒன்று.. வீரட்டேஸ்வரர் கோயில் வரலாறு.  திருக்கோவலூர் ( திருக்கோயிலூர்) இன்று 28/6/2020 ஞாயிறு பதிவு செய்து வணங்குகின்றோம் . நமது முகநூல் நண்பர் திருப்பூர் நண்பர் ஐயா அவர்களுக்கு இன்று காலை முதல் காய்ச்சல் இருந்து வருகின்றது !அவர் என்னிடம் திருக்கோவிலூர் பைரவர் படம் போட சொல்லி பிரார்த்தித்து கொள்ள வேண்டினார் !நாம் அனைவரும் அவருக்வலூர் ( திருக்கோயிலூர் ) மூலவர் – வீரட்டேஸ்வரர் ( அந்தகாந்தர் ) அம்பாள் – சிவானந்தவல்லி ( பெரியநாயகி , பிருஹன்நாயகி ) தலமரம் – வில்வமரம் , சரக்கொன்றை தீர்த்தம் – தென்பெண்ணையாறு ( தட்சிண பிணாகினி ) புராண பெயர் – அந்தகபுரம் , திருக்கோவலூர் ஊர் – திருக்கோவிலூர் மாவட்டம் – விழுப்புரம் மாநிலம் – தமிழ்நாடு பாடியவர்கள் – அப்பர் , சம்பந்தர் , சுந்தரர் • தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் 11 வது தலம் இது • அட்ட வீரட்டத் தலங்களில் இரண்டாவது தலம். சிவனார் அந்தகாசூரனை சம்ஹாரம் செய்த வீரச்செயல் புரிந்த தலம் • தென்பெண்ணையாற்று பாலத்தைக்கடந்து ஊருள் சென்று , கடலூர் – பண்ர...

ஆண் பெண் முக்தி நிலை அடைய தியானம் செய்ய வேண்டும்

 ஆணின் சலிப்பிற்குப் பெண்ணும் காரணமல்ல;  பெண்ணின் சலிப்பிற்கு ஆணும் காரணமல்ல.  இந்த மனச் சலிப்பு, அதாவது -- ஏமாற்றத்தை உணர, உளவியலின் ஆழத்திற்குச் செல்ல வேண்டும்.  ஏதாவது ஒன்றை நீங்கள் எதிர் பார்த்திருந்தால்தான், ஏமாற்றம், மனச் சலிப்பு, போதும் போதுமென்ற வெறுப்பு உருவாகும்.  எதிர்பார்ப்பு எதுவும் இல்லையென்றால், மனச்சலிப்பு எப்படி வரும்? பெண்களின் ஏமாற்றத்திற்குக் காரணமே, அவர்கள் ஆண்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதுதான்.  பாவம்! ஆண்களால் பெண்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவே முடியவில்லை.  பெண்களுக்குக் கற்பனை அதிகம்.  சாதாரண ஆண்மகனையும் அவர்கள் கதாநாயகன் ஆக்கி விடுகிறார்கள்.  சாதாரண மடையர்கள் கூட, அவர்களின் கற்பனைக் கண்களுக்கு பெரிய அறிவாளி போல் தெரிகிறார்கள்.  அவர்களை மெல்ல மெல்ல நெருங்கிச் சென்று பார்க்கும்போது, அந்த, மாமனிதர்கள் சாதாரண மனிதர்கள் ஆகி விடுகிறார்கள்.  அதனால்தான் ஏமாற்றம்.  எதையும் பெரிதாகக் கற்பனை செய்து கொள்வதால் வரும் விவகாரம் அது.  கற்பனையிலேயே வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா, என்ன?  இன்றோ நாளையோ எதார்த்த ...

மனித படைப்பின் நோக்கம் மரணம் இல்லா பெறுவாழ்வு என்றால் என்ன?

 இறப்பு என்பது இயற்கை! சாகாமல் இருக்க வேண்டும் என்று அலைபவன் முட்டாள் என்று கூறப்படுகிறதே! மரணமில்லா பெருவாழ்வு இயற்கைக்கு எதிரானதா? இப்பூவுலகில் தோன்றிய ஒவ்வொரு பொருளும் மறைந்து தான் ஆக வேண்டும் என்பது இயற்கை விதி. ஆனால் மரணமில்லா பெருவாழ்வு தான் ஒரு ஜீவன் பெற்றுக் கொள்ளுகின்ற கடவுள்நிலை என்று சைவ சமயமும் வள்ளல் பெருமானும் கூறுவது ஏன்?  பதில்:- மனிதர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிறிதளவு ஆறாம் அறிவு ஆகிய பகுத்தறிவை கொடுத்ததற்கே இந்த அளவு ஆணவத்தால் போராடுகிறார்கள். இந்த உலகையே படைக்கும் வல்லமை உடைய இறைவனுக்கு எவ்வளவு பெரிய ஞானம் இருந்திருக்க வேண்டும். அதுதான் பேரறிவு முற்றறிவு என்று சொல்கின்றோம்.  நாய் குட்டி நாய் ஆகின்றது. பூனை குட்டி பூனை ஆகின்றது. குதிரை குட்டி குதிரை ஆகின்றது. அவ்வாறே கடவுளுடைய குட்டி ஆகிய நாம் கடவுளாக நிலை மாற்றமடைய வேண்டும். அதற்கு பேரறிவு தேவை. அதையே மெய்ஞானம் என்கிறோம். அந்த மெய்ஞானத்தை அடைய முடியாத பொய் ஞானத்தை உடைய முட்டாள்கள் பேசும் பேச்சு தான் மரணம் இயற்கை என்பது. நீங்கள் ஜீவன்முக்தர் களையும் சித்தர்களையும் மட்டுமே பார்த்து அவர்களுடைய கர...