லிங்கோத்பவர் சிலை ஒவ்வொரு சிவன் கோவிலின் மூலவரின் பின்புறமும் காணப்படும். இக்கதை உணர்த்தும் உண்மை என்ன?
கேள்வி :- லிங்கோத்பவர் சிலை ஒவ்வொரு சிவன் கோவிலின் மூலவரின் பின்புறமும் காணப்படும். இக்கதை உணர்த்தும் உண்மை என்ன? பதில் : நான்் முன்பே கூறியது போல முன்னோர்கள் கூறிய கதைகளில் விஞ்ஞான உண்மை பொதிந்து இருக்கும். தீவீரவாதிகள் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஒரு மொழியை உருவாக்குவார்கள். வேறு ஒருவருக்கும் அது புரியாது. அது போலவே இறை தேடுதலில் தீவீரவாதிகளாகிய ஞானிகளும் , தாம் அறிந்த இறை ஞானத்தை பகிர்ந்து கொள்ள பாடல் ,கதை மூலம் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தனர். இது இன்னொரு தீவீரவாதிக்கு மட்டுமே புரியும். இக்கதையில் வரும் ப்ரம்மா என்பவர்கள், போலி மதவாதிகள். ப்ரம்மா முடியைக் கண்டு விட்டேன் என்று கூறுவதைப் போல , போலி மதவாதிகளும் இறைவனைப் பார்த்து இப்போதுதான் பேசிவிட்டு வருகிறேன் என்று கூறுவார்கள். இக்கதையில் விஷ்ணு என்பவர் வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டிப் பார்ப்பதைப் போல , விஞ்ஞானிகள் பூமியைத் தோண்டித் தோண்டிப் பார்க்கின்றனர். தங்கள் கண்டுபிடிப்பின் மூலம் உலகை காப்பாற்றுவதாக கூறுகின்றனர்.இவர்களே காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் விஷ்ணு ,தன்னால் சிவனின் அடியை காண ம...