லிங்கோத்பவர் சிலை ஒவ்வொரு சிவன் கோவிலின் மூலவரின் பின்புறமும் காணப்படும். இக்கதை உணர்த்தும் உண்மை என்ன?
கேள்வி :- லிங்கோத்பவர் சிலை ஒவ்வொரு சிவன் கோவிலின் மூலவரின் பின்புறமும் காணப்படும். இக்கதை உணர்த்தும் உண்மை என்ன?
பதில் :
நான்் முன்பே கூறியது போல முன்னோர்கள் கூறிய கதைகளில் விஞ்ஞான உண்மை பொதிந்து இருக்கும்.
தீவீரவாதிகள் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஒரு மொழியை உருவாக்குவார்கள். வேறு ஒருவருக்கும் அது புரியாது.
அது போலவே இறை தேடுதலில் தீவீரவாதிகளாகிய ஞானிகளும் , தாம் அறிந்த இறை ஞானத்தை பகிர்ந்து கொள்ள பாடல் ,கதை மூலம் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தனர். இது இன்னொரு தீவீரவாதிக்கு மட்டுமே புரியும்.
இக்கதையில் வரும் ப்ரம்மா என்பவர்கள், போலி மதவாதிகள்.
ப்ரம்மா முடியைக் கண்டு விட்டேன் என்று கூறுவதைப் போல , போலி மதவாதிகளும் இறைவனைப் பார்த்து இப்போதுதான் பேசிவிட்டு வருகிறேன் என்று கூறுவார்கள்.
இக்கதையில் விஷ்ணு என்பவர் வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டிப் பார்ப்பதைப் போல , விஞ்ஞானிகள் பூமியைத் தோண்டித் தோண்டிப் பார்க்கின்றனர். தங்கள் கண்டுபிடிப்பின் மூலம் உலகை காப்பாற்றுவதாக கூறுகின்றனர்.இவர்களே காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள்
விஷ்ணு ,தன்னால் சிவனின் அடியை காண முடியவில்லை என ஒத்துக்கொண்டது போல , விஞ்ஞானிகளும் தற்போது முழுமையாக எங்களால் கண்டறிய இயலாது என ஒத்துக்கொள்கின்றனர்.
விண்வெளி ஓடம், சாட்டிலைட் ,ஆட்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புகிறேன் என்பதெல்லாமே சூரியகுடும்பத்தில் உள்ள இன்னொரு உறுப்பினரின் வீட்டுக்கு சென்றுள்ளார்கள் என்பதே.
நம் சூரிய குடும்பம் போல இன்னும் கோடிக்கணக்கான நட்சத்திர குடும்பங்கள் இருக்கின்றதே.அதற்கெல்லாம் சென்றுவிட முடியுமா?
கண்டிப்பாக முடியாது ஏன் என்றால் நீங்கள் அங்கு செல்வதற்க்குள், பூமியில் சில வீடுகள் புதிதாய் முளைப்பதைப் போல இன்னும் புதிதாய் கோடிக்கணக்கில் நட்சத்திர குடும்பங்கள் தோன்றி இருக்கும்.
ஏனென்றால் இந்தப் ப்ரபஞ்சம் என்பது வினாடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் (ஒளியின் வேகத்தில்) விரிவடைவதாக இன்றைய விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். எவ்வாறு நம்மால் செல்ல முடியும்?
நம் ஞானிகள் இந்த எல்லையற்ற, உருவமற்ற ப்ரபஞ்சத்தை சிவம் என்றனர்.
சிவம் வேறு, சிவன் வேறு.
சிவம் என்பது உருவமில்லாத, எல்லையற்ற ப்ரபஞ்சம்.
சிவன் என்பது இந்த எல்லையில்லாத தன்மையை மக்களுக்கு உணர்த்துவதற்காக எல்லையற்ற ,உருவமற்ற தன்மையில் இருந்து வெளிவந்த ஒரு உருவமுள்ள சிவம் (குரு).
உருவமற்றது சிவம். உருவமுள்ளது சிவன்.
“இந்த எல்லை இல்லாத ப்ரபஞ்ச தன்மையை அனுபவப்பூர்வமாக உணர்ந்த வழித்தோன்றல் அனைவருமே சிவன்தான்” என சத்குருஸ்ரீபிரம்மா கூறுவார்.
இந்த எல்லை இல்லாத ப்ரபஞ்சத்தின் அடியையோ (அ) முடியையோ யாராலும் காணமுடியாது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எளிய கதை மூலம் கூறினர்
இதை இன்னொரு முறையில் கூறலாம்.
இறைவனை வெளியில் தேடுவது என்பது அறியாமை .நீங்கள் அறியாமையில் இருக்கும் வரை உங்களால் இறைவனின் அடியையும் ,முடியையும் காண முடியாது.
உள்ளே தேடினால் தான் கிடைப்பான்.!!!
எல்லையற்ற ப்ரபஞ்சத்தில் நம்மால் என்ன செய்து விட முடியும்.?
ஒன்று மட்டும் நம்மால் முடியும்.!!!
ப்ரபஞ்ச இறைவனிடம் சரணாகதி அடைய மட்டுமே முடியும்.
இந்த உண்மையை உணர்த்தவே லிங்கோத்பவர் சிலை.
எவ்வளவு பெரிய அறிவியல் உண்மையை எளிமையான , மறக்க முடியாத ,மறுக்க முடியாத கதைகள் மூலம் கூறிய நம் ஞானிகள், எப்பேர்ப்பட்ட அறிவாளிகள்?!!!
(சமய சடங்குகள், ஆலய அமைப்புகள், கடவுள் சிலைகள் பற்றிய விஞ்ஞானபூர்வமான புரிதலை நமது குருநாதர் "சைவ சன்மார்க்க விடிவெள்ளி" யோகி ஆடலரசன் ஐயா அவர்கள் நடத்தும் தச காரிய வாசி யோக சாகா கல்வி வகுப்பில் சேர்ந்து அனைவரும் பயிலலாம்.)
-யோகி ஆடலரசன் ஐயா.
நிறுவனர் :-வாகீசர் வாசியோக சாகா கல்வி பயிற்சி மையம்.
மற்றும் அகில உலக சைவ சன்மார்க்க முன்னேற்ற கழகம்.
திருக்கோவிலூர்.
செல்- 8675371212
Comments
Post a Comment