இறப்பு என்பது இயற்கை! சாகாமல் இருக்க வேண்டும் என்று அலைபவன் முட்டாள் என்று கூறப்படுகிறதே! மரணமில்லா பெருவாழ்வு இயற்கைக்கு எதிரானதா? இப்பூவுலகில் தோன்றிய ஒவ்வொரு பொருளும் மறைந்து தான் ஆக வேண்டும் என்பது இயற்கை விதி. ஆனால் மரணமில்லா பெருவாழ்வு தான் ஒரு ஜீவன் பெற்றுக் கொள்ளுகின்ற கடவுள்நிலை என்று சைவ சமயமும் வள்ளல் பெருமானும் கூறுவது ஏன்? பதில்:- மனிதர்களுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிறிதளவு ஆறாம் அறிவு ஆகிய பகுத்தறிவை கொடுத்ததற்கே இந்த அளவு ஆணவத்தால் போராடுகிறார்கள். இந்த உலகையே படைக்கும் வல்லமை உடைய இறைவனுக்கு எவ்வளவு பெரிய ஞானம் இருந்திருக்க வேண்டும். அதுதான் பேரறிவு முற்றறிவு என்று சொல்கின்றோம். நாய் குட்டி நாய் ஆகின்றது. பூனை குட்டி பூனை ஆகின்றது. குதிரை குட்டி குதிரை ஆகின்றது. அவ்வாறே கடவுளுடைய குட்டி ஆகிய நாம் கடவுளாக நிலை மாற்றமடைய வேண்டும். அதற்கு பேரறிவு தேவை. அதையே மெய்ஞானம் என்கிறோம். அந்த மெய்ஞானத்தை அடைய முடியாத பொய் ஞானத்தை உடைய முட்டாள்கள் பேசும் பேச்சு தான் மரணம் இயற்கை என்பது. நீங்கள் ஜீவன்முக்தர் களையும் சித்தர்களையும் மட்டுமே பார்த்து அவர்களுடைய கர...
சிவபெருமானின் அட்ட வீரட்ட தலங்களில் திருக்கடையூரும் ஒன்றாகும். நாகை மாவட்டம் பொறையாறு அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவர் அமிர்தகடேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருந்து அருள்புரிந்து வருகிறார். எமனை உதைத்த காலசம்ஹார மூர்த்திக்கு தனி சன்னிதி உள்ளது. அம்பாளின் திருநாமம் அபிராமி. பிரம்மா, ஞான உபதேசம் பெற வேண்டும் என சிவபெரு மானிடம் வேண்டினார். அதற்கு சிவபெருமான், பிரம்மாவிடம் வில்வ விதை ஒன்றைக்கொடுத்து இந்த விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு நீ என்னை வழிபடு என்றார். சிவபெருமான் கட்டளைப்படி பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப்பார்த்தார். திருக்கடவூரில் தான் வில்வ விதையில் இருந்து முளை வந்தது. இதனால் இந்தப்பகுதிக்கு வில்வவனம் என்ற பெயர் ஏற் பட்டது. சாகாவரம் தரும் அமிர்தத்தை பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது வெளிப்பட்ட அமிர்தத்தை அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாத தேவர்கள் அதை குடத்தில் வைத்து எடுத்துக்கொ...
Comments
Post a Comment