ஏன் இந்த உலகம், இங்கே ஏன் இத்தனை துன்பங்கள்? எதற்காக? அதன் நோக்கந்தான் என்ன?"
எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம்? ஏன் இந்த உலகம், இங்கே ஏன் இத்தனை துன்பங்கள்? எதற்காக? அதன் நோக்கந்தான் என்ன?" நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விசயம்,"இந்த உலகம் இருப்பது நீங்கள் ஞானம் (liberate) அடைய வேண்டும்" என்பதற்காகவே "ஏன் இந்த உலகம், இங்கே ஏன் இத்தனை துன்பங்கள்? எதற்காக? அதன் நோக்கந்தான் என்ன?" என்று பலமுறை உங்கள் மனதில் கேள்வி எழுந்திருக்கும். "நாம் எதற்காக இருக்க வேண்டும். வாழ்க்கை துன்பகரமானது என்கிறபோது அதை வாழ்வதன் நோக்கம் என்ன? ஒரு கடவுள் இருக்கிறார் என்றால் இந்தப் பெருங்குழப்பத்தை அவர் போக்க வேண்டியது தானே. இந்தத் துன்பகரமான வாழ்க்கையை - அதன் துயரத்தை ஏன் அவரால் துடைத்தெறிய முடியவில்லை? அவர் ஏன் வலுக்கட்டாயமாய் மக்கள் அதை வாழும்படி செய்ய வேண்டும்?" என்கிறார்கள். யோகா இதற்கான பதிலை வைத்திருக்கிறது " ஒரு ஜீவாத்மாவிற்கு வாழ்க்கை மூலம் அனுபவத்தைத் தந்து அவனை விடுபடச் செய்வதே நோக்கம்" என்கிறார் பதஞ்ஜலி. அது ஒரு பயிற்சி. துன்புறுதல் ஒரு பயிற்சி, காரணம் துன்புறாமல் பக்குவப்படுவது சாத்தியமில்லை. அது தீ மாதிரி, தங்கம் தூ...