ஏன் இந்த உலகம், இங்கே ஏன் இத்தனை துன்பங்கள்? எதற்காக? அதன் நோக்கந்தான் என்ன?"

 எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம்?


ஏன் இந்த உலகம், இங்கே ஏன் இத்தனை துன்பங்கள்? எதற்காக? அதன் நோக்கந்தான் என்ன?"


நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விசயம்,"இந்த உலகம் இருப்பது நீங்கள் ஞானம் (liberate) அடைய வேண்டும்" என்பதற்காகவே "ஏன் இந்த உலகம், இங்கே ஏன் இத்தனை துன்பங்கள்? எதற்காக? அதன் நோக்கந்தான் என்ன?" என்று பலமுறை உங்கள் மனதில் கேள்வி எழுந்திருக்கும். "நாம் எதற்காக இருக்க வேண்டும். வாழ்க்கை துன்பகரமானது என்கிறபோது அதை வாழ்வதன் நோக்கம் என்ன? 

ஒரு கடவுள் இருக்கிறார் என்றால் 

இந்தப் பெருங்குழப்பத்தை அவர் போக்க வேண்டியது தானே. இந்தத் துன்பகரமான வாழ்க்கையை - அதன் துயரத்தை ஏன் அவரால் துடைத்தெறிய முடியவில்லை? அவர் ஏன் வலுக்கட்டாயமாய் மக்கள் அதை வாழும்படி செய்ய வேண்டும்?"

என்கிறார்கள்.


யோகா இதற்கான பதிலை வைத்திருக்கிறது " ஒரு ஜீவாத்மாவிற்கு வாழ்க்கை மூலம் அனுபவத்தைத் தந்து அவனை விடுபடச் செய்வதே நோக்கம்" என்கிறார் பதஞ்ஜலி.


அது ஒரு பயிற்சி.

துன்புறுதல் ஒரு பயிற்சி,

காரணம் துன்புறாமல் பக்குவப்படுவது சாத்தியமில்லை. அது தீ மாதிரி, தங்கம் தூய்மையடைய அந்தத் தீயில் அது புடம் போடப்பட்டாக வேண்டும். தங்கம், "ஏன்?" என்று கேட்டால் தூய்மையற்றதாயும், தகுதியற்றதாயும் இருக்க வேண்டியதுதான். தீயிலிடப்படுகிற போது தங்கத்தில் உள்ள அசுத்தங்கள் எரிக்கப்பட்டு விடும். சுத்தமான தங்கம் எஞ்சியிருக்கும்.

விடுதலை என்பது - விடுவிக்கப்படுவது இதுதான். முடிவாக எது களங்கமற்றதோ அது இருக்கும். களங்கமானவை எரிக்கப்பட்டு விடும். 


இவ்வாறு அனுபவத்தால் தூய்மையாக்கப்பட்ட ஜீவாத்மாவானது ஜீவன் முக்தி எனும் நிலையை பெறுகிறது. அதன் பிறகும் அதற்கு வேலை இருக்கிறது!!! 


அதாவது அவ்வாறு பக்குவப்பட்ட ஜீவன் முத்தரை அடுத்த கட்டமாக அஷ்டகர்மத்திற்கு இறைவன் தேர்ந்தெடுத்து அந்த அனுபவங்களை தரத் தொடங்குகிறார். அஷ்டகர்மங்களையும் முடித்து விட்ட ஜீவாத்மாவிற்கு அடுத்த கட்டமாக அஷ்டமா சித்தி வழங்க தொடங்குகிறார். 


அஷ்டாங்க யோகம், அஷ்ட கர்ம யோகம், அஷ்டமா சிட்தி யோகம் என்ற மூன்றையும் படிப்பதற்கு பல்வேறு கஷ்ட நஷ்டங்களை அந்த ஜீவான்மா கடந்து வரவேண்டி இருக்கிறது. இவை எல்லாமே அவை திறமை அடையவும், அறிவை அடையவும் உண்டான பயிற்சிகளல்லாது வேறில்லை.


 அஷ்டாங்க யோகம், அஷ்ட கர்ம யோகம், அஷ்டமா சித்தி யோகம் மூன்றையும் முடிக்கும் ஜீவாத்மா கடவுளாக நிலை மாற்றம் அடைகிறது. இதையே வள்ளல் பெருமான் கடவுள் தன்மை அறிந்து அம்மாயமாதல் என்று குறிப்பிடுகிறார்


 எனவே துன்பம் இல்லாமல் பக்குவம் இல்லை. பக்குவம் இல்லாமல் ஜீவன்முக்தி இல்லை. ஜீவன் முக்தி இல்லாமல் அஷ்டகர்மம் இல்லை. அஷ்டகர்மம் இல்லாமல் அஷ்டமாசித்தி இல்லை. 


இந்த தசகாரிய வாசியோக சாகாக்கல்வி படிப்பானது ஒரு ஜீவாத்மாவை பரமாத்மாவாக மாற்றுகிறது. அதை புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் தச காரிய வாசியோக சாகாக் கல்வியை படித்து மரணமில்லாப் பெருவாழ்வை அடைய முன்வர வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி. வணக்கம்.


- யோகி ஆடலரசன். நிறுவனர்:- வாகீசர் தசகாரிய வாசி யோக பயிற்சி மையம் மற்றும் சன்மார்க்க யோக சேவை இயக்கம் திருக்கோவிலூர்

Cell - 8675371212

Comments

Popular posts from this blog

மனித படைப்பின் நோக்கம் மரணம் இல்லா பெறுவாழ்வு என்றால் என்ன?

பரியங்க யோகம்

யோக விஞ்ஞானம் வாசியோகம்