யோக விஞ்ஞானம் வாசியோகம்

 யோக விஞ்ஞானம்

கேள்வி :-

வாசியோக பயிற்சிகள் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் சிறிது விளக்க வேண்டுகிறோம்


 பதில் :-


இயற்கையை, அதன் இயங்கும் முறைகளை முற்றிலுமாக ஆராய்ந்து உணர்ந்த விஞ்ஞானிகளே மெய்ஞானிகளாகும்.அவர்கள் கண்டறிந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பு பிராணசக்தியாகும். 


இந்த பிரபஞ்சத்தை இயக்கும் அதே சக்திதான் பிரபஞ்சத்துள் இருக்கும் அனைத்து படைப்புகளையும் இயக்குகிறது.அதே சக்திதான் தனிம உலகையும்,தாவர உலகையும், விலங்கு உலகையும் இயக்குகிறது.


 எப்படி மின்சாரம் என்பது Heater, AC,fan,iron box,car, tubelight போன்ற எல்லா கருவிகளையும் இயக்க வல்லதோ அவ்வாறே அந்த படைப்பு சக்தியே ஒவ்வொரு உயிரினத்துக்குள்ளும் இருந்து அதை இயங்க வைக்கிறது.


அவ்வாறே நம் உடலிலும் அந்த உயிர்சக்திதான் நம்மை இயங்க வைக்கிறது என்பதை மிகப்பெரும் விஞ்ஞானிகளான நம் மெய்ஞானிகள் கண்டறிந்தனர்.


அந்த உயிர்சக்தியை நம்முள் உருவாக்குவதற்கே சுவாசிக்கிறோம்


.ஒவ்வொரு பொருளும் எரிவதற்கு Oxygen அவசியம் என்பதை 200 வருடங்களுக்கு முன்புதான் கண்டறிந்தனர்.ஆனால் அனைத்து உயிரினங்களும் சுவாசித்தலின் முலமாக Oxygenஐ சுவாசித்து உணவை எரித்து சக்தியை உருவாக்குகின்றன


இந்த வியக்கத்தக்க உண்மை உயிரினங்கள் தோன்றிய நாள் முதல் நம்கண் முன்னே இருந்தாலும் இப்போதுதான் அதை மனிதகுலம் உணர்ந்திருக்கிறது


இவற்றை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்த நம் யோகிகளும் சித்தர்களும் நம் சுவாசத்தை "சுவாச வேள்வி"என்று அழைத்தனர் அந்த வேள்வியில் உருவாகும் உயிர்சக்தியை (ஆகுதியை) பேரறிவையும்,பேரன்பையும் (சிவம்) அடைவதற்காகவே உபயோகிக்கவேண்டும்.


அவ்வாறு இல்லாமல் புலனின்பத்திற்காக,பொழுதுபோக்கிற்காக மனம்போன போக்கில் உபயோகித்தால் நம் உடல் என்னும் அற்புதமான கருவி மிக விரைவில் அழிந்து விடுவதோடு பேரறிவை அடைய நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பும் தவறி போகிறது.


இதை புரிந்து கொண்டு நம் உயிர்சக்தியை (Energy) மனம்போன போக்கில் புலனின்பத்திற்காக செலவிடாமல் பேரறிவை (ஞானம்)அடைய பயன்படுத்துவதே வாசியோகப்பயிற்சியின் ஒரு அங்கமான பிராணாயாமம் என்பதாகும்


அனைத்து சித்தர்களும் வாசியோகம் பயின்றே ஸித்திகளையும், பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவற்றிலிருந்து முக்தியையும் அடைந்தனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.


நவீன அறிவியல் பூர்வமான வாசியோகப்பயிற்ச்சி வாகீசர் வாசியோக மையத்தில் கற்றுத்தரப்படுகிறது 


--யோகி ஆடலரசன் ஐயா.

நிறுவனர்:- வாகீசர் தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சிமையம்,

திருக்கோவிலூர்

(near திருவண்ணாமலை).

செல் - 8675371212




Comments

Popular posts from this blog

மனித படைப்பின் நோக்கம் மரணம் இல்லா பெறுவாழ்வு என்றால் என்ன?

பரியங்க யோகம்