சாப்பாடு தூக்கம் மூச்சு மரணம் இவற்றை வெல்வதற்கான வழி தான் வாசியோகம்
சாப்பாடு, தூக்கம், மூச்சு, மரணம் இவற்றை அருள்பவர் கடவுளா? இவற்றை வெல்லும் வழி தான் வாசியோகமா ?
அல்லது இவற்றை வெல்ல அருள் செய்பவர் கடவுளா?
உண்மை கடவுள் என்பவர் சாப்பாடு தூக்கம் மூச்சு மரணம் இவற்றை வெல்வதற்கான அறிவை கொடுப்பவர். ஆனால் இங்கு அனைத்து மதங்களும் காட்டும் கடவுளர்கள் மேய்ப்பவராகவோ அல்லது இரட்சகராகவோ, ருசியான சாப்பாடு கொடுப்பவராகவோ, சொகுசாக தூங்குவதற்கு நல்ல வசதியான வீடு, வேலை, மனைவி சொத்து சுகங்களை கொடுப்பவராகவோ சித்தரிக்கப்படுகிறார்கள்.
புலன் இன்பநோக்கத்திற்கு துணை செய்பவர் கடவுளா? புலன்களை வென்று நாமே கடவுளாவதற்கு துணை செய்பவர் கடவுளா?
வள்ளலார், அப்பர் , சிவ பெருமான் ஆகியோரெல்லாம் பசி, தூக்கம், மூச்சு, மரணம் போன்றவற்றை வென்று நாமே கடவுளாவதற்கு தேவையான அறிவை நமக்கு அளிக்கும் குருமார்களாக செயல்பட்டார்கள் !
ஆனால் சோறு போடும் வள்ளலாரை பிடிக்கும் மக்களுக்கு சாப்பாடு, தூக்கம், மூச்சு மரணத்தை வெல்வதற்கு தேவையான ஞானத்தை கொடுக்கும் வள்ளலாரை பிடிப்பதில்லை!
சாப்பாடு, தூக்கம், மூச்சு, மரணம் இவை அனைத்து மத மக்களுக்கும் தேவை. இது உண்மைக்கடவுள் அமைத்த கம்பெனி செட்டிங். நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான சாப்பாடு, தூக்கம், மூச்சு, மரணம் இவற்றை நம்முடைய பகுத்தறிவயும் உடலையும் மனதையும் பயன்படுத்தி நாமே நம் திறமையால் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆனால் இவற்றை வெல்வதற்கு தேவையான அறிவை சாகா கல்வி பயின்று பரவிசாரம் செய்து முழுமையான ஞானம் அடைந்த உண்மை குருவின் துணை இன்றி யாராலும் பெற இயலாது.
உண்மை கடவுள் மனித இனத்திற்கு ஆறாம் அறிவை வைத்ததன் நோக்கமே அவன் சாப்பாடு, தூக்கம், மூச்சு, மரணம் இவற்றை வென்று ஏழாம் அறிவுக்கு செல்ல வேண்டும் என்பதே ஆகும்.
அந்த பகுத்தறிவை கடவுளாவதற்கு பயன்படுத்தாமல் கடவுளிடம் இவற்றை பெறுவதற்கு பிச்சை எடுப்பது தான் இன்றைய மதபோத கர்கள், போலிசாமியார்கள் மற்றும் இரட்சகர்களாக தங்களை காட்டிக் கொள்ளும் போலி குருக்கள் காட்டுகிறார்கள் எனில் இவர்களை தூக்கி குப்பையில் எறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அனைத்து மத , சமய மக்களும் முக்தி அடைவதற்கு தேவையான சாகா கல்வியை மனித இனத்திற்கு தருவதற்கு உண்மை கடவுள் தயாராகி விட்டார்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சர்வ மத இறைநெறியாளர் சங்கம் என்ற அமைப்பின் மூலம் இந்த சகா கல்வியை கற்றுத்தர உத்தரவிட்டுள்ளார்.
ஆறாம் அறிவு உள்ள அனைத்து மத மக்களுக்கும் சாப்பாடு தூக்கம் மூச்சு மரணம் இவற்றை வெல்வதே முக்தி அடைவதற்கான வழி என்பதை அறிவியல் பூர்வமாக ஆதாரத்துடன் நிரூபித்து கடவுள் தன்மை அறிந்து நாமும் கடவுளாவது என்பதே சர்வ மத இறைநெறியாளர் சங்கம் நிறுவப்பட்டதன் நோக்கம்.
டாக்டர் ஆவதற்கும், என்ஜினியர் ஆவதற்கும் தியானமோ, மூச்சுப் பயிற்சியோ, ஹடயோகமோ தேவையில்லை.
அதுபோல் கடவுளாவதற்கும் சாகா கல்வியே தேவை. தியானமும், மூச்சுப் பயிற்சியும், ஹட யோகமும் உதவாது என்பதை புரிந்து கொண்டு , சிவபெருமான், அப்பர் பெருமான், வள்ளலார் காட்டிய சுத்த சிவ சன்மார்க்கத்தின் வழி நின்று சாகா கல்வியை பயின்று நாமும் கடவுள் ஆவது தான் ஒரே வழி .
அதற்கான படிப்பு தான் வாசியோகம்.
வாசி யோகம் என்பது மூக்கை பயன்படுத்தி செய்யும் மூச்சுப் பயிற்சி அல்ல மூளையை பயன்படுத்தி செய்யும் முழுமையான அறிவு பயிற்சி!
ஆனால் நமக்கு நன்றாக படிப்பு வர வேண்டும் என்றால் ஆரோக்கியம் மற்றும் சந்தோஷமான மனநிலை தேவை அவற்றை அடைவதற்கு வள்ளலார் காட்டிய வழிதான் பரோபகாரம் என்னும் ஜீவகாருண்ய ஒழுக்கம்.
அதாவது கடவுளாவதற்கான வழியில் இருப்பவர்கள் படும் துன்பங்களை நீக்குதல், பசி நீக்குதல், நோய் நீக்குதல் போன்றவை.
ஆனால் பரோபகாரத்தை மட்டுமே விரும்பும் மக்கள் வள்ளலார் கூறும் பறவை சாரத்தை கல்வியை கற்க தவறுவது ஏனோ?
கடவுளாவதற்கு பரோபகாரத்துடன் பரவிசாரத்தையும் செய்ய வேண்டும் என்று நமது வள்ளல் பெருமான் வலியுறுத்துவதை காண தவறும் முட்டாள்கள் உண்மை கடவுளையும் புரிந்து கொள்ளப் போவதில்லை, சன்மார்க்கத்தையும் சமய மத மார்க்கங்களையும் புரிந்து கொள்ளப் போவதில்லை.
அவர்கள் குழந்தைத்தனமான ஆன்ம லாபத்தை விரும்பாத மக்களாகவே இருப்பர். அவர்கள் பல பிறவிகளாக இங்கேயே சுத்தி சுத்தி வர வேண்டும்
என்பதே உண்மை கடவுளின் உத்தரவு.
இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு பரோபகாரத்துடன் பரவிசாரத்தையும் செய்வதற்கு, சாகா கல்வி கற்பதற்கு முன் வரும் மக்களுக்கு உதவுவதற்காக வள்ளல் பெருமான் மற்றும் அப்பர் பெருமான் ஆகியோருடைய அருளாணைக்கிணங்க சர்வமத இறைநெறியாளர் சங்கம் என்ற அமைப்பு அடியேனால் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சர்வ மத இறைநெறியாளர் சங்கத்தின் மூலமாக அன்னதானம், நோய் நீக்குதல் போன்ற பரோபகாரம் இலவசமாகவும் பரவிசாரம் என்கின்ற அறிவியல் பூர்வமான சாகா கல்வி மிகக் குறைந்த கட்டணத்துடனும் வள்ளலார் மற்றும் அப்பர் பெருமான் அருளானகிக்கிணங்க அளிக்கப்படுகிறது.
இவற்றைப் பற்றிய தெளிவான காணொளி இந்த youtube channel லிங்கில் உள்ளது
https://youtu.be/KH9uVjrfw6Q?si=918cKb2uQDrn0Qfz
ஜாதி, மத பேதமின்றி அனைவரும் இந்த சர்வமத இறைநெறியாளர் சங்கத்தில் இணைந்து பரோபகாரம் மற்றும் பரவிசாரம் செய்து சாகா கல்வி கற்று, சாப்பாடு, தூக்கம், மூச்சு, மரணம் இவற்றை வென்று மரணமிலா பெருவாழ்வை பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய நன்முயற்சியின்கண் இருந்தால் அனைவரும் மரணமில்லா பெரு வாழ்வை பெற்றுக் கொள்வது உறுதி
நன்றி. வணக்கம்.
- நிர்வாக குழு.
யோகி ஆடலரசன் ஐயா அவர்கள் நிறுவியுள்ள சர்வமத இறைநெறியாளர் சங்கம் மற்றும் வாகீசர் தச காரியவாசி யோக சாகா கல்வி பயிற்சி மையம். திருக்கோவிலூர்.
செல் - 8675371212
Comments
Post a Comment