ஆன்மீகமும் உடலின் அறிவியலும்

 உலகம் இன்னும் உடலைப்பற்றிய அறிவியலையே தாண்டாத போது நமது பாரதமோ உயிரைப் பற்றிய அறிவியலை வழங்கிச் சென்றுள்ளது. 

ஆனால் நாமோ வெள்ளையனுக்கு வால்பிடிப்பதை கைவிடவில்லை. 


மனித உடலானது பருவுடல் என்றும் நுண்ணுடல் என்றும் இரு உடல்களை கொண்டுள்ளது. ஆன்மீகத்தில் நான்கு உடலாகவும் கூறுவது உண்டு. 


பருவுடல் பஞ்ச பூதங்களால் ஆனது. 

நுண்ணுடல் மனம், புத்தி, அகங்காரத்தினால் ஆனது. 

இவை இரண்டையும் இயக்குவது உயிர் ஆகும். 


பருவுடலில் வாத பித்த கப வடிவில் கழிவுகள் தேங்கினால்...

உடலில் ஏற்படும் நோய். 


ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்கள் மனதில் தேங்கினால் மனநோய். 


நோய் என்பது முதலில் அஹங்காரத்தில் வருகிறது. இரண்டாவது உடலிலும் மனதிலும் வருகிறது.

இந்த அஹங்காரமே நாம் ஆவோம். 


உடல் என்பது நாம் அல்ல. உடல் என்பது ஜடப்பொருள் மட்டுமே. 


உடலை உயிரானது உயிர்சக்தியைக் கொண்டு இயக்குகிறது. உயிரே உடலை பாதுகாத்து பராமரிக்கிறது. 


உணவின் மூலம் கிடைக்கும் உயிர்சத்தையும் சுவாசம் மூலம் கிடைக்கும் உயிர்க்காற்றையும் எரிக்கும்போது உயிர்சக்தி கிடைக்கிறது. அதுவே வெப்பமாக நமக்கு வெளிப்படுகிறது.


இந்த உயிர்சக்தியே நோயெதிர்ப்பு சக்தியாக செயல்பட்டு நோயை குணப்படுத்தும். 


உடல் உழைப்பின் மூலம் உயிர் சக்தி செலவழிக்கப்படுகிறது. 


உயிர்சக்தி தேவையை பசி, தாகமாக உணர்கிறோம். 


கழிவுகளை வெளியேற்றி உடலை புதுப்பித்துக் கொள்ள ஓய்வு உறக்கம் தேவைப்படுகிறது. 


ஓய்வு, உடற்பயிற்சி, நீர், உணவு, வெப்ப சக்தி, சுவாசம் ஆகிய பஞ்ச பூத பிராண சக்திகள் ஆறு மட்டுமே உடலின் அடிப்படை தேவை.

   

இவைகள் தன்னளவில் கூடினாலோ குறைந்தாலோ நோய் உண்டாகிறது. 


உயிர் சக்தி அதிகம் செலவழிக்கப்பட்டு உயிர்சக்தியை மீண்டும் உருவாக்க இயலாமல் போனால் மரணம் நிகழ்கிறது. 


உயிர்சக்தியை அதிகரிக்க உதவி செய்வதே மருத்துவம். அந்த விதத்திலேயே உணவு என்ற அடிப்படையில் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. 


ஆனால் நடைமுறையில் தற்போது உயிர்சக்தியை அதிகரிக்கும் கழிவுகள் வெளியேற்றும் செயலை நோய் என்று கூறி விஷங்களை கொடுத்து உயிர்சக்தியை குறைத்து கழிவு வெளியேற்றத்தை தடுப்பதே மருத்துவம் என்றாகி விட்டது.


தமிழ் மக்களுக்கு தற்போதைய உடனடிதேவை அடிப்படை சைவ சன்மார்க்க விஞ்ஞான அறிவும் தசகாரியவாசி யோக சாகா கல்வி கல்வியை யோகி ஆடலரசன் ஐயா அவர்கள் மூலம் கற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலான வாழ்வியல் பயிற்சிகளுமே ஆகும்.


சைவ சன்மார்க்க வாழ்வியல்பயிற்சிகளை மேற்கொண்டால் ஒழிய நம்மை காப்பாற்ற ஆண்டவனாலும் இயலாது


எனவே தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சியில் அனைத்து நண்பர்களையும் கலந்து கொள்ளச் செய்து விழிப்புணர்வடையச் செய்து மீண்டும் நல்லதோர் சைவ சன்மார்க்க விஞ்ஞானபூர்வ உலகை படைக்க நாமெல்லாம் உறுதி ஏற்போம்.

🔥🔥🔥🙏🙏🙏

 ஓம் நமசிவாய

யோகி ஆடலரசன் ஐயா.


 நிறுவனர்:- வாகீசர் வாசியோகப் பயிற்சி மையம் மற்றும் சைவ சன்மார்க்க முன்னேற்ற கழகம். திருக்கோவிலூர்.

Cell - 8675371212.

🔥🔥🔥🙏🙏🙏

Comments

Popular posts from this blog

மனித படைப்பின் நோக்கம் மரணம் இல்லா பெறுவாழ்வு என்றால் என்ன?

பரியங்க யோகம்

யோக விஞ்ஞானம் வாசியோகம்