யோகி ஆடலரசன் ஐயாவின் உண்மையான வாசியோக அழைப்பு
ஒரே வார்த்தையில் கூறுவதானால்
நாங்கள் ஒரு விடும் "அழைப்பு"
யாரெல்லாம் தங்களை தொலைத்துவிட்ட ஆழ்ந்த ஏக்கத்துடன் தங்களைத் தாங்களே கண்டுபிடிக்காவிட்டால் வாழ்வு அர்த்தமின்றி போய்விடும் என்று ஆழமான உந்துதல் உடன் தேடிக் கொண்டு இருக்கிறார்களோ
அந்தத் தேடல்தான் உங்கள் முழு முதல் தேவையாக, முதலும் கடைசியுமான தேவையாக இருக்குமேயானால், அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம் ஆனால் அதை இழக்க முடியாது என்று இருக்குமேயானால் அப்பர் பெருமானும், வள்ளல்
பெருமானும் இணைந்து முன் நின்று நடத்துகின்ற சைவ சன்மார்க்கம் உங்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு!!!
உடல் நிலையில் பல்வேறு தேவைகள் இருக்கின்றன.
மன நிலையில்ஆயிரம் ஆயிரம் ஆசைகள் உள்ளன.
ஆனால் உங்கள் ஆன்மாவின் ஏக்கத்தை பொறுத்தவரை ஒன்றே ஒன்றுதான் அதன் லட்சியம். தன் இருப்பிடம் திரும்பி விடுவது, தன் உண்மை நிலையை கண்டு பிடிப்பதுதான் உங்கள் ஆன்மாவின் ஒரே லட்சியம்.
அதை அடைவதற்கு சைவ சன்மார்க்க தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சி வகுப்பும், வாழ்வியல் நெறியும் ஒரு அற்புதமான வாய்ப்பு.
ஆன்மாவின் ஏக்கத்தை நிறைவு செய்ய துடிப்பவர்களுக்கு நாங்கள் விடும் ஒரு அழைப்பு இது.

Comments
Post a Comment