இல்லறம் வழியில் இறைநிலை அடைந்த வள்ளலார்
வீட்டைவிட்டு வெளியேறி தேசாந்திரியாக திரியும் நோக்கத்தோடு தன்னுடைய பால்யவயது நண்பர் ரத்தினமுதலியார் என்பவருடன் வடலூர் ராமலிங்க வள்ளல் பெருமான் சென்னை ஏழுகிணறு பகுதியில் அப்போது தவவாழ்வு வாழ்ந்த சிவயோகி விபூதிசித்தர் என்பவரிடம் சென்று கலந்தாலோசித்தார்.
விபூதிசித்தர்மேல் பெருமதிப்பு கொண்டு பழகிவந்த வள்ளல் பெருமானுக்கு" உன் வீட்டு பெரியவர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் நற்குணவதியான பெண்ணை திருமணம் செய்துகொள்" என ஆலோசனை வழங்கினார் விபூதி சித்தர் .
"நீ மரணமிலா பெருவாழ்வடைய விரும்பினால் தேசாந்திரியாக திரியும் சாமியார்வாழ்க்கை ஒருபோதும் உதவாது.அது ஆன்ம ஞானத்தையும், ஜீவன்முக்த தன்மையையும் வழங்குமேயன்றி மரணமிலாபெருவாழ்வை அடையும் நோக்கத்தோடு பிறந்துள்ள உனக்கு ஒருசிறிதும் உதவாது.
திருமணம் செய்துகொண்டு உன் மனைவியாக வரவிருக்கும் அப்பெண்ணிடம் உரிமையோடு வாசியோகத்தைப்பற்றி பேசி புரிந்துகொள்ளச்செய்.
சொத்துசுகத்துடன்,காமத்தை அனுபவித்து பிள்ளைகளை பெற்றுக்கொண்டு வாழ்ந்து மடிவதற்க்கும், சிவயோகசித்தியெலாம் பெற்று மரணமிலாபெருவாழ்வடைவதற்காக கணவனும்,மனைவியுமாக சேர்ந்து முயற்ச்சிப்பதற்கும் உள்ள வேறுபாட்டையும், அதனுடைய அளப்பறிய பயனையும் நீ உணர்ந்து கொள்ளவேண்டும்.
உன்னையே நம்பிவரும் ஒருபெண்ணிடம் மரணமிலாபெருவாழ்வை அடையும் வழிமுறைகளைப்பற்றி உரிமையுடன் பேசி அப்பெண்ணையும் கடைத்தேற்றுவது பின்னாட்களில் நீ உலகமாந்தர்களுக்கு உபதேசிக்க இருக்கும் நிகழ்வுகளுக்கு ஒரு பயிற்சியாகவும் அமையும்.
காமவயப்பட்டு கல்யாணம் செய்துகொண்டு அறியாமையால் உழன்று மடிவதே அஞ்ஞான வாழ்வு.
மரணமிலா பெருவாழ்வை அடைவதற்காக திருமணம்செய்துகொள்வதென்பதும்,
இருவரும் சேர்ந்து முதலிரவு அறையில்கூட காமத்தைவென்று திருவாசகத்தையும்,திருமுறைகளையும் தியானிப்பதென்பதும் உன்மூலமாக இறைவன் உலகமாந்தர்களுக்கு உணர்த்தவிருக்கும் புரட்சிகரமான யோகபாடமாக நிகழவிருப்பதை நான் காண விரும்புகிறேன்." என்று வலியுறுத்திக்கூறினார்
விபூதிசித்தரின் இந்த ஆலோசனையை அப்படியே சிரமேற்கொண்டு தனது சகோதரி மகளை மணந்து செயல்படுத்தியதாலேயே ஜீவன்முக்தராக இறக்கஇருந்த வள்ளல்பெருமான் யாரும் பெறுதற்கரிய மரணமிலா பெருவாழ்வெனும் பெருவரம் பெற்று உண்மைத் துறவறம் ஈதென்று நிலைநாட்டினார்.
வள்ளல் பெருமான் தனது தாயும், மனைவியும் மரணமடைந்தபின்பே சென்னையிலிருந்து ஏறத்தாழ தனது முப்பத்தாறாம் வயதில் வெளியேறி சிதம்பரம், வடலூர், கருங்குழி,மேட்டுக்குப்பம் போன்ற தலங்களில் வாழலுற்றார்.
36அகத் தத்துவங்களை தன் அகத்திலேயே(வீடு) இருந்து கடந்து அதற்குமேல் அனக வாழ்வடைந்தார்.
விபூதி சித்தர் வள்ளல் பெருமானார்க்கு அளித்த ஆலோசனையை நாமும் இப்பதிவின் வாயிலாகக்கேட்டபிறகு எப்படி நம்மால் சாதாரண வாழ்வை வாழமுடியும்?
யோகி ஆடலரசன் ஐயா.
நிறுவனர்:- வாகீசர் வாசியோகப் பயிற்சி மையம் மற்றும் சைவ சன்மார்க்க முன்னேற்ற கழகம். திருக்கோவிலூர்.
Cell - 8675371212.
Comments
Post a Comment