பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன் சதாசிவன் இவர்களின் ஆயுள் என்ன?

 கொசு ,நாய், பூனை போன்றவற்றிற்கு ஆயுள் இருப்பதைப்போல் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன் சதாசிவன் இவர்களுக்கும் ஆயுள் இருக்கின்றது என்று கூறும் தலைசுற்ற வைக்கும் நம் முன்னோர்களின் அற்புதமான காலக் கணக்கீடு 


15 கண்ணிமைப் பொழுது - ஒரு காட்டை

30 காட்டை - கலை

30 கலை - முகூர்த்தம்

30 முகூர்த்தம் - நாள்

15 நாள் - பக்கம்

2 பக்கம் - மாதம்

2 மாதம் - இருது

3 இருது - அயனம்

2 அயனம் - வருடம் (தேவர்க்கு ஒரு நாள்)

4,32,000 வருடம் - கலியுகம்

8,64,000 வருடம் - துவாபரயுகம்

12,96,000 வருடம் - திரேதாயுகம்

17,28,000 வருடம் - கிருத யுகம்

43,20,000 வருடம் - மகாயுகம், 4 யுகம், (தேவயுகம் 12,000 தேவருடம்)

30,67,20,000 வருடம் - 71 மகாயுகம், மனுவின் காலம்,

(மன்வந்தரம் 8,52,000 தேவ வருடம்) ஒரு இந்திரன் ஆயுள்

4,29,40,80,000 வருடம் - 994 மகாயுகம், 14 மனுக்கள், 14 இந்திரர்கள்

2,59,20,000 வருடம் - 6 மகாயுகம் (இரண்டு சந்திகள்)

4,32,00,00,000 வருடம் - 1000 மகாயுகம் 1 கற்பம், பிரம்மாவின் பகல்

8,64,00,00,000 வருடம் - 2 கற்பம், பிரமம் நாள்

360 பிரம்ம நாள் - பிரமம் வருடம்

100 பிரம்ம வருடம் - பிரமம் ஆயுள் - விண்டு பகல்

200 பிரம்ம வருடம் - மகா விஷ்ணுவிற்கு ஒரு நாள்

360 விஷ்ணு நாள் - ஒரு விஷ்ணு வருடம்

100 விஷ்ணு வருடம் - ஒரு விஷ்ணுவின் ஆயுள், இது ஒரு உருத்திரன் பகல்

200 விஷ்ணு வருடம் - ஒரு உருத்திர நாள்

360 உருத்திர நாள் - ஒரு உருத்திர வருடம்,

பரார்த்த உருத்திர வருடம், உருத்துரன் ஆயுள், ஈசுரன் பகல்

2 பரார்த்த உருத்திர வருடம் - ஈசுரன் நாள்

360 ஈசுர நாள் - ஈசுர வருடம்

பரார்த்த ஈசுர வருடம் - ஈசுரன் ஆயுள் சதாசிவன் பகல்

2 பரார்த்த ஈசுர வருடம் - சதாசிவநாள்இதற்கு மேல் கற்பனைக்கு எட்டாத காலம்.


 தற்காலம் சுவேதவராக கற்பத்தில் 7 வது மனுவாகிய வைவஸ்வத மன்வந்தரத்தில் 28 வது மகாயுகத்தில் 4 வது பாதமாகிய கலியுகம் நடக்கின்றது.


இதையே நம்முடைய வாசியோக சாகா கல்வியில் சிவபெருமானுடைய அடியையும் முடியையும் பார்க்க முடியாது என்றும் நடுவில் நமக்கு தெரிந்ததை வைத்து நாமே பலப்பல மனக் கற்பனையில் தீர்மானித்துக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறார்கள். இதுவே அறியாமை அல்லது ஆணவம் என்று சைவசித்தாந்தம் குறிப்பிடுகிறது


அதாவது அந்தகார இருள் கூட நம்மை காட்டும் வெளியில் உள்ள பொருளை தான் காட்டாது. ஆனால் அக இருளாகிய அறியாமை நான் யார் என்பதையும் காட்டாது ,பிற பொருள்களையும் காட்டாது. எனவே சாகாக் கல்வியை கற்று ஞானம், முக்தி மோட்சத்தை அடைய அனைவரும் பாடுபட வேண்டும் என்பதையே நமது வள்ளல் பெருமானும் சித்தர்களும் வலியுறுத்துகிறார்கள்.


சைவசித்தாந்தம் மற்றும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் காட்டும் தசகாரிய வாசியோகம் தான் உண்மையான சாகாக்கல்வி. செத்த வித்தை மற்றும் மற்ற போலி குருமார்கள் காட்டும் வாசியோகம் உண்மையில் வாசியோகம் அல்ல அது வெறும் அஷ்டாங்க யோகத்தில் வரும் பிராணயாமம் என்பதை புரிந்து கொண்டு உண்மையான வள்ளலார் காட்டும் மார்க்கம் ஆகிய தசகாரிய வாசியோக சாகாக் கல்வியை பயின்று சிவபெருமான் முதன்முதலாக அளித்த சன்மார்க்க சைவ சித்தாந்தத்தை வளர்க்க அனைவரும் பாடுபட வேண்டும்.


தாடி விட்டால்தான் வாசி யோகம் சித்திக்கும், பொண்டாட்டியுடன் வாசி யோகம் பயின்றால் தான் வாசி யோகம் சித்திக்கும் என்றெல்லாம் ஊரை ஏமாற்றும் போலி குருமார்களுக்கு நடுவில் வாசி யோகம் என்பது ஒரு கல்வி முறை என்று அற்புதமாக விளக்கும் நமது குருநாதர் யோகி ஆடலரசன் ஐயா அவர்களின் பாதையில் பயணித்ததால் வந்த தெளிவே இந்த பதிவு. நன்றி.

 வணக்கம்.🙏

யோகி ஆடலரசன் ஐயா.


 நிறுவனர்:- வாகீசர் வாசியோகப் பயிற்சி மையம் மற்றும் சைவ சன்மார்க்க முன்னேற்ற கழகம். திருக்கோவிலூர்.

Cell - 8675371212.


Comments