சிற்றம்பலக்கல்வி மற்றும் சாகா கல்வி பயிற்சி பற்றிய விளக்கங்கள்
சிற்றம்பலக்கல்வி மற்றும் சாகா கல்வி பயிற்சி பற்றிய விளக்கங்கள்:-
வள்ளலார் காட்டும் உண்மையான வாசி யோகம் என்பது ஊனினை உருக்கி உள் ஒளியை பெருக்கி உங்களையே நம்பி உங்கள் உடலில் வாழும் 100 கோடி செல்களையும் ஓஜஸ் எனும் ஒளி ஆற்றல் நிரம்பச் செய்து சாகாமல் காப்பதே ஆகும். இவ்வாறு செய்பவரே உண்மையான சன்மார்க்கி. இதுவே வள்ளலார் கூறும் அகவினத்தார் ஆக உருமாற்றம் அடைதல்.
சாகாதவனே சன்மார்க்கி, சாகின்றவன் சுத்த சன்மார்க்க நிலையை பெற்றவன் அல்ல என்று வள்ளல் பெருமான் கூறி உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.
வள்ளல் பெருமானும், சைவசமய நால்வர் பெருமக்களும், சப்தரிஷிகளும், பதினெண் சித்தர் பெருமக்களும் கடைபிடித்த வாசி யோகம் என்பது தசகாரிய வாசி யோகம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வாசி யோகம் என்பது செத்த வித்தை சட்ட விதிகள் கூறும் ஒரு பயிற்சி அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
செத்த வித்தையில் வெறும் ஸ்தூல உடலுக்கு மட்டுமே இடகலை, பிங்கலை என்று காற்றைப் பிடித்து ஸ்தூல உடலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வள்ளலார் கூறும் தசகாரிய வாசியோகத்தில் சூட்சும, காரண, உடல்கள், பிராணமய, விஞ்ஞானமய கோச உடல்கள் இவற்றுக்குத் தேவையான ஓஜஸ் எனும் ஒளி உணவையும் ஆற்றலையும் கொடுத்து மரணமில்லா பெருவாழ்வு அல்லது நம் உடலை நினைத்த பொழுது உருவாக்கவும் அழிக்கவும் கூடிய வல்லமையை பெறுவதே உண்மையான வாசியோகப் பயிற்சி என்று வள்ளல் பெருமான் கூறுவதை நாம் உற்றுக் கவனித்துப் புரிந்து கொள்ள வேண்டும்
இதற்கு நாம் செய்ய வேண்டிய பயிற்சி எல்லாம் வெறும் அறிவியல் பூர்வமான படிப்பு மட்டுமே. இதில் ஸ்தூல உடலுக்கு தேவையான பிராணாயாம பயிற்சி என்பது ஒரு அரை மணி நேரம் மட்டுமே பயில வேண்டிய ஒரு பயிற்சியாகும்.
மீதமுள்ள இருபத்தி மூன்றரை மணி நேரப் பயிற்சி என்பது வாசித்தல் அதாவது அறிவியல்பூர்வமாக நம் அன்னமய உடலையும் மற்ற மனோமய, பிராணமய, விஞ்ஞானமய, ஆனந்தமய உடல்களைப் பற்றி ஆராய்ந்து புரிந்து கொண்டு அதை நிலை மாற்றமடைய செய்வதற்கான வழிமுறைகளை அணுகுதல் என்பதே உண்மையான வாசியோகப் பயிற்சி.
இந்த அறிவியல் பூர்வமான அணுகுமுறை அல்லாத வேறு எந்த ஒரு வாசியோக, குண்டலினி யோக, கிரியா யோக பயிற்சி முறைகள் உங்களுக்கு எந்த விதத்திலும் நன்மை தராது.
இந்த தசகாரிய வாசியோக சாகா கல்வி பயிற்சியானது ஆண்கள் பெண்கள் வயதானவர்கள் என அனைவரும் செய்யக்கூடிய எளிமையான பயிற்சியாகும். இந்த வாசியோக பயிற்சி என்பது ஜாதி மதங்கள் கடந்தது. வாகீசர் வாசி யோக மையத்தில்இந்த பயிற்சி ஜாதி மத பேதமின்றி அனைவருக்கும் கற்றுத் தரப்படுகிறது. குடும்ப பெண்களுக்கு உயர்நிலை வாசியோக பயிற்சி முடித்த பெண்களாலேயே ஆன்லைனில் கற்றுத் தரப்படுகிறது.
பயிற்சி நேரம் மற்றும் கட்டணம் குறித்த விபரங்களை கீழ்கண்ட செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். குடும்பப் பெண்கள் உங்களுக்கு வசதியான நேரத்தில் வாசியோகம் ஆன்லைனில் பயிலலாம்.

Comments
Post a Comment