நாரதர் சஞ்சரித்த 3 உலகம் எது ?
வாசியோகத்தின் மூலம் தான் மூன்று உலகங்களிலும் சஞ்சரிக்கக்கூடிய வல்லமை நாரதர் போன்ற ரிஷிகளுக்கு இருந்ததாக படித்துள்ளோம்.அந்த 3உலகம் என்பது எது? அவை எங்கிருக்கின்றன?
பதில் :-
மூன்று வகையான உலகங்கள் உள்ளன.தனிம உலகம் ,தாவர உலகம், விலங்கு உலகம்.
விலங்கு உலகம் அதன் உணவிற்கு அடிப்படையில் தாவர உலகத்தை நம்பி இருக்கிறது.தாவர உலகம் தம் உணவுக்கு அடிப்படையில் தனிம உலகத்தை நம்பி இருக்கிறது.
ஒரு விலங்கு எப்பபடி பிறக்கிறது எப்படி வாழ்கிறது என்று நமக்கு தெரியும்.ஒரு தாவரம் எப்படி விதையிலிருந்து முளைவிடுகிறது, எப்படி வாழ்கிறது என்று நமக்கு தெரியும்.ஆனால் ஒரு தனிமம் (தங்கம்,இரும்பு போன்ற உலோகங்கள்) எப்படி உருவாகின்றது? எப்படி வாழ்கின்றது என்று யாருக்கும் தெரியாது.
இதுவரை கண்டறியப்பட்ட114 தனிமங்களையும் உருவாக்கியது யார்?தாவர உலகுக்கும்,விலங்கு உலகுக்கும் அவை உருவாகுவதற்கு அடிப்படைக் காரணம் தனிம உலகமே, அதாவது அணுக்கள் சேர்ந்து மூலக்கூறுகளாகின்றன.மூலக்கூறுகள் சேர்ந்து சேர்மமாகிறது, சேர்மங்கள் சேர்ந்து கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்பாக உருவாகிறது.
இம் மூன்றின் கலவையே தற்போது நாம் காணும் ஜீவராசிகளின் உடல்களாகும். இதுவரை கண்டறிப்பட்ட 114 தனிமங்களில் சில வாயு நிலையிலும், சில திரவநிலையிலும் இன்னும் சில தனிமங்கள் திட நிலையிலும் உள்ளன.
இந்த தனிமங்களின் திட, திரவ, வாயு நிலைகளின் மாற்றத்திற்கு வெப்பம் காணமாகிறது.இந்த நான்குக்கும் அடிப்படையாக ஆகாயம் ஆதாரமாக உள்ளது.
எனவே இந்த ஆகாயத்தைப்பற்றி ஆராயும் ஒரு அறிவியல் பிரிவே "விண் ஞானம்" ஆகும். இன்றைய நவீன விஞ்ஞானம் மேற்குறிப்பிட்ட மூன்று உலகைப் பற்றிய அறிவிலும் குழந்தை நிலையிலேயே உள்ளது.எனவே நம் மனித குலம் இன்னும் எவ்வளவோ தூரம் அறிவுப்பாதையில் பயணிக்க வேண்டியுள்ளது.
இந்த அறிவுப்பாதையில் செல்ல தடையாக உள்ள தீவிரவாதம், புலனின்பம்,சுயநலம் இவற்றை அறவே அழித்து முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு அனைவரும் முயல வேண்டும்.
உலகத்திலிருந்து நாம், என்ன சுகத்தை பிழிந்து எடுக்கலாம் என்ற சுயநலம் மாறி இந்த உலகத்திற்கு நம்மால் என்ன வழங்க முடியும் என்று பொதுநலத்தோடு ஒவ்வொருவரும் பாடுபட்டால்ஒழிய சூழ்நிலைச்சீர்கேடு, உலகம் வெப்பமயமாதல், தீவிரவாதம் போன்றவற்றை மாற்றமுடியாது.
இந்த 3உலகங்களைப்பற்றி பஞ்சபூதங்களை துணையாகக் கொண்டு யோகி ஆடலரசன் ஐயா போன்ற உண்மையான குருநாதரின் வழிகாட்டுதலுடன் கூடிய தசகாரிய வாசி யோக கல்வியால்ஆராய்ந்து இறைநிலையான பேரறிவு (ஞானம்) அடைவதே ஆன்மீகம் என்ற மெய்யறிவியல்.
நம் தமிழ் சித்தர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவியலின் உச்சத்தை அடைந்த விஞ்ஞானிகளாகும்
அவர்கள் இந்த மூன்று உலகங்களிலும் சஞ்சரிக்கக்கூடிய வல்லமையை சிவபெருமானே முன் நின்று சப்தரிஷிகளுக்கும் தனது மனைவியான பார்வதி தேவிக்கும் சொல்லிக் கொடுத்த தசகாரிய வாசியோகம் எனும் அறிவியல் பூர்வமான தொழில்நுட்பத்தால் அடைந்தனர்.
அதை நாமும் பயன்படுத்தி மூன்று உலகத்திலும் சஞ்சரிக்க முடியும்.
--யோகி ஆடலரசன் ஐயா
நிறுவனர்:- அகில உலக சைவ சன்மார்க்க முன்னேற்ற கழகம் மற்றும் வாகீசர் தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சி மையம்.
திருக்கோவிலூர்
Cell - 8675371212

Comments
Post a Comment