மனித பிறப்பின் நோக்கம் என்ன?
வெளி வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை வைத்து அதை ஆன்மீகம் என்று முடிவு செய்ய முடியாது.
*ஆன்மீகம்_ என்பது*...
*உங்கள் ஆன்மா சார்ந்த விஷயங்களை வாசி யோக சாகா கல்வி மூலம் எந்த அளவுக்கு கற்றுள்ளீர்கள் என்பதாகும்.
வாசியோக சாகா கல்வியை கற்பதன் மூலம் நீங்கள் அகவினத்தாராக உண்மையிலேயே மாற்றம் அடையும் பொழுது உங்கள் உள்மையத்தில் அன்பு நிலைக்கொண்டிருக்கும்,வெளியேயும் நீங்கள் அன்பாய் இருக்க முடியும்
உள்ளே அமைதி நிலை கொண்டிருந்தால், வெளி நிலை தானே வசப்படும்.
உள்மையத்தில் விழிப்புணர்வு இருந்தால், உங்கள் வாழ்வில் தூய்மை பிரகாசிக்கும்.
வெளியே மாற்றங்கள் செய்யத் தொடங்கினால், அது உங்கள் உள்ளே எந்த மாற்றத்தையும் உருவாக்காது.
ஆனால்,உள்ளே மாற்றம் நடந்தால் வெளியிலும் தானே மாற்றம் ஏற்பட்டுவிடும். காரணம்,வெளிப்புறம் என்பது உங்கள் நிழலாகும்.
நிழலில் மாற்றம் செய்தால் உள்ளே எந்த மாற்றமும் ஏற்படாது*.
வெளிப்புறம் மாற்றங்கள் செய்யும் முயற்சியில், ஜனங்கள் வாழ்வை வீணடித்துக் கொள்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
தங்கள் பழக்கவழக்கங்ளை மாற்றிக்கொள்ள பெரிய அளவில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். தங்களுக்கு வாசி யோக பயிற்சி செய்ய நேரமில்லை என்று சொல்கிறார்கள்.
வெளியில் பழக்க வழக்கங்கள் மாறினால் எதுவும் நடந்து விடாது. நீங்கள் அகவினத்தாராக மாற இயலாது.
நீங்கள், நீங்களாகவேதான் இருப்பீர்கள்.
நீங்கள் செல்வம் சேர்த்தால், தானதர்மங்கள் செய்யலாம். நீங்கள் அன்னதானம் செய்யலாம். மக்கள் உங்களை பெரிய ஆன்மீகவாதி என்று போற்றலாம்.
ஆனாலும் உள்ளே நீங்கள் மாற்றமின்றி புறவினத்தாராக, பழைய ஆளாகவேதான் இருப்பீர்கள்.
தசகாரிய வாசி யோகத்தின் மூலம் உங்களுடைய உள்ளுணர்வை, ஆழ்ந்த விழிப்புணர்வை தொட்டால் ஒழிய நீங்கள் மாற முடியாது. வெளியில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதால் உள்ளே எதுவும் மாறிவிடாது.
கடவுள் என்பது ஒரு பதவி நாமும் கடவுள் ஆவதற்கு தான் இந்த பூமியில் பிறந்துள்ளோம் என்பதை உணர்ந்து கொண்டு அந்த லட்சியத்தை நோக்கி விழிப்புணர்வோடு உயர்வது தான் நீங்கள் மாறுவதற்கு ஒரே வழி.
- யோகி ஆடலரசன் நிறுவனர்:-அகில உலக சைவ சன்மார்க்க முன்னேற்ற கழகம் மற்றும் வாகீசர் தசகாரிய வாசியோக சாகா கல்வி பயிற்சி மையம். திருக்கோவிலூர்.
Cell :-8675371212
Comments
Post a Comment