சாகா கல்வியின் மூன்று வகை முக்தி எது ?

 

🔥🔥🔥ஓம் நமசிவாய! 🔥🔥🔥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🔥🔥🔥🔥🔥🔥
அனைத்து முக்தர்களுக்கும், சித்தர்களுக்கும், ஞானிகளுக்கும் தனிப்பெரும் தலைவனான பிரபஞ்ச தலைவன் சிவபெருமானை வணங்கி மகிழ்வோம்!
எல்லா உயிரும் சிவபெருமான் நேரடியாக முன் நின்று அளித்த தசகாரிய வாசி யோக சாகா கல்வி கற்று, இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!
கொல்லா நெறியே எல்லா நெறிகளுக்கும் உயர்ந்த நெறி!
மேன்மைமிக்க சைவ சன்மார்க்க நீதி விளங்குக உலகமெல்லாம்!
விஞ்ஞானபூர்வமான சைவ சன்மார்க்கம் உலகெங்கும் பரவுவதற்கு இதனுடைய விஞ்ஞானபூர்வமான தன்மைகளை எடுத்துரைத்து உண்மைச் சரியை கிரியை யோக ஞானத்தில் நடை இட்டு சிவத்தொண்டு செய்வோம் வாரீர்!
போலியான உபாயச்சரியை, கிரியை, யோக, ஞானத்தை தவிர்த்து உண்மையான விஞ்ஞானபூர்வமான தசகாரிய வாசி யோகம் பயின்று மரணமில்லா பெருவாழ்வு அடைவது ஒன்றே நம் முன் நிற்கும் ஒரே வழி!
மரணமில்லா பெருவாழ்வு என்பது கருவி ஆகிய நம் உடலை நாமே அசெம்பிள் செய்ய கற்றுக் கொள்வதும் தேவையில்லாத போது பிரித்துப் போட கற்றுக் கொள்வதும் ஆகும். இவ்வாறு நம் உடலை நாமே பிரித்து போடவும் அசெம்பிள் செய்யவும் கற்பதற்கான கல்வியே சாகா கல்வி. இதை கற்பதால் மட்டுமே நாம் மரணமில்லா பெருவாழ்வை அடைய முடியும். அதுவே வாசி யோகம்.

நம் உடலைப் பற்றி படிப்பதற்கான சாகா கல்வியில் மூன்று படித்தரங்கள் இருக்கின்றன.
1.சுத்த தேகத்தை அடைந்தால் அது ஜீவன் முக்தி.
2.பிரணவ தேகத்தை அடைந்தால் அது கர்ம முக்தி,
3.ஞான ஒளி தேகத்தை அடைந்தால் அது ஞான முக்தி.
விஞ்ஞான பூர்வமான இந்த தசகாரிய வாசி யோக கல்வி ஆனது அப்பர் பெருமான் மற்றும் வள்ளல் பெருமான் ஆகியோரது நல்வழி காட்டுதலால் சுத்த தேகம், பிரணவ தேகம் இவற்றை ஜெயித்த நமது குருநாதர் "சைவ சன்மார்க்க விடிவெள்ளி" யோகி ஆடலரசன் அய்யா அவர்களால் கற்பிக்கப்படுகிறது. பலரும் கற்று பயனடைகிறார்கள். சைவ சன்மார்க்க சாம்ராஜ்யத்தை உலகத்தில் நிலைநாட்டுவதற்கு இதுவே சமயம் எனவே அனைவரும் சாகா கல்வி கற்று சைவ சன்மார்க்கம் வளர ஆதரவு தர வேண்டும். நல்லதோர் உலகம் செய்வோம்!!!
-- நிர்வாக குழு.
வாகீசர் தசகாரிய வாசி யோக சாகா கல்வி பயிற்சி மையம் மற்றும் சன்மார்க்க யோக சேவை இயக்கம். திருக்கோவிலூர்.
Cell - 8675371212

Comments

Popular posts from this blog

மனித படைப்பின் நோக்கம் மரணம் இல்லா பெறுவாழ்வு என்றால் என்ன?

திருக்கடையூர் சிவபெருமானின் அட்ட வீரட்டேஸ்வரர் தலம்

பரியங்க யோகம்