மனம் அடங்கும் தியானம் வாசியோக கல்வி
அன்புள்ள குருநாதா !
உள்ளுணர்வு , விழிப்புணர்வு, ஞானம், தியானம், வாசியோகம், கடவுள்
இவைகளை குறித்து
பல முறை உங்கள் சிந்தனைகள் மூலம் விளக்கம் பெற்றுள்ளேன். இருப்பினும்,
இன்னும் மனம் தெளிவடையாமல்,
பல சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கிறது.
இவைகளை பற்றி தெரிந்து கொள்வதைவிட,
நேரிடையாக இவைகளை உணர்ந்து கொள்ள வழி ஒன்றும் இல்லையா ?
குருநாதரின் பதில் :--
இருப்பை உணர்ந்து கொள்ள எளிமையான தசகாரிய வாசியோக தியான வழி
ஒன்றுஉள்ளது.
அதை விளக்கமாக எடுத்து சொல்வதில்
எந்தத் தடையும் இல்லை.
ஆனால் எவருமே அதை, பயன்பாட்டிற்கு
எடுத்துக் கொள்ள தயங்குகிறார்கள்.
உன்னிடம் அந்த தியான முறையை சொல்கிறேன்.
அதற்கு முன்,
அதை பற்றிய ஒரு உதாரணம்.
வீட்டில், சமையல் முடிந்த பின்
அந்த சமைத்த பாத்திரங்களை,
எளிதாக சுத்தம் செய்து விடுவார்கள்
இல்லத்தரசிகள்.
எப்போதாவது, அரிதாக
ஒரு நிகழ்வு நடக்கும்.
இல்லத்தரசிகள்,
பால், அல்லது காய்கறிகளை
ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து விட்டு, இடைப்பட்ட நேரத்தில்
முக்கியமான, அவசரமாக வேறு வேலையில் கவனம் செலுத்தி,
அடுப்பில் வைத்து பாத்திரத்தை மறந்து போய் விடுவார்கள்.
காய் கறிகள் அந்த பாத்திரத்துடன் சேர்ந்து தீய்ந்து போய் விடும்.
அந்த பாத்திரத்தை விளக்கி சுத்தப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல.
எப்படி சுத்தப்படுதினாலும்,
அந்த தீசல் கறை சுத்தமாகாது.
பலர் வீட்டில்,
அந்த பாத்திரத்தையே தூக்கி
போட்டு விடுவார்கள்.
அதனை சுத்த படுத்த வேண்டும் என்றால்,
அந்த பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்து,
எந்த அளவு சூட்டில்
அது 'அடி பிடித்ததோ '
அந்த அளவு சூட்டிற்கு கொண்டு சென்றால்,
அந்த சூட்டில்,
தீசல் கறை தானாகவே பாத்திரத்தை விட்டு விலகிவிடும்.
பிறகு
அதை ஒரு துணியால்
சுலபமாக சுத்தம் படுத்தி விடலாம்.
இந்த முறையில்,
கையை சுட்டுக் கொள்ளாமல்
மிக கவனமாக இருக்க வேண்டும்.
இந்த சாதாரண அடுப்படி நிகழ்வை
உதாரணமாக உன் மனதில்
நிறுத்திக் கொள்.
இப்போது தியான சிந்தனைக்கு வருவோம்.
ஒரு குழந்தை பிறந்து,
ஒரு நிலைக்கு
வளர்ந்து வருவது வரையில்,
அதற்கு எல்லா வித பாதுகாப்பும் தேவை.
ஒரு நிலையில் அதற்கு
பிறர் கொடுக்கும் பாதுகாப்புத் தேவை இல்லை.
அதுவே தன்னை பாதுகாத்துக் கொள்ளும்.
எப்படி அது நிகழ்கிறது என்றால்,
பெற்றவர்களும், உறவினர்களும் அந்த குழந்தைக்கு கொடுக்கும் பாதுகாப்பு பற்றிய செயல் அனைத்தும்,
அந்த குழந்தையின் மனதில் பதிந்து,
ஒரு நிலைக்கு பிறகு,
அந்த பதிவே, தனித்து நின்று
அதன் பாதுகாப்பை தன்னிச்சையாக
தொடரும்.
ஆனால், பதிந்த கர்ம வினை பதிவிற்கும்,
இயற்கையான உள்ளிருப்பிற்கும்
மோதல் உருவாகும்.
அந்த மோதலில் நீதான் தலையிட வேண்டும்.
இரண்டே வழிகள்தான் உள்ளன
ஒன்று,
வினை பதிவிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தலைத்தூக்கும்
தெய்வீகமான உள்ளுணர்வை வளரவிடாமல் தடுப்பது.
இந்த வழி,
சிரமமில்லாதது, வசதியானது என்பதால்,
அனைவருமே பின்பற்றுவது
இந்த வழியைதான்.
தேவை இல்லாத வினைப் பதிவுகளை சுமந்து, தெய்வீக உள்ளுணர்வை
பலவீனப் படுத்துவது.
இதில் எந்த வித முயற்சியும் தேவையில்லை. சிரமமும் இல்லை.
*ஆனால் இதற்கான விலை மரணம்*.
மற்றது,
உள்ளுணர்வுக்கு மதிப்பளித்து,
பதிவுகளை நீக்குவது.
இது சுலபமல்ல. மிக சிரமமானது. என்று இதுவரை வந்த குருமார்கள் போதித்து வந்தார்கள் ஆனால் தசகாரிய வாசி யோக சாகா கல்வியில் அறிவின் மூலமாக மனம் குழந்தை நிலைக்கு செல்வதால் பதிவுகளை நீக்குவது என்பது மிகவும் சுலபமாகிறது. இதையே நமது முன்னோர்கள் "கற்றலின் கேட்டல் நன்று" என்று கூறினார்கள்.
தசகாரி வாசி யோக சகா கல்வியை ஒரு குரு மூலம் கேட்டல் என்பது தீசல் கறை உள்ள அடி பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்வது போன்றது.
அது அவ்வளவு சுலபம் இல்லைதான்.
மனது உங்களை எளிதில் விடாது.
அதன் வலையை பின்னி அதையும் மிக உறுதியாக வைத்துக் கொள்ளும்.
நான் சொன்ன சமையலறை உவமைக்கதையில் வருவது போல,
தீசல் பிடித்த பாத்திரத்தை சுத்தப்படுத்துவது போல,
மனதை பின்னோக்கி குழந்தை நிலைக்கு எடுத்து செல்வது, தசகாரிய வாசியோக சாகா கல்வியில் குருவினுடைய அருளால்
அப்படி செல்லும்போது,
அந்தந்த நிலையில்,
உங்களை முன்பே பிடித்துக்கொண்டிருந்த பதிவுகள் தானாகவே விலகி விடும்.
தூய்மையான பாத்திரம் போல் மனது ஆகிவிடும்.
இந்த மிகவும் தூய்மையான மற்றும் கர்ம வினை பதிவுகள் காலியான மனதில் இறைவனுடைய அருள் தசகாரிய வாசி யோக சாகா கல்வியால் நிரம்புவது மிகவும் சுலபமாகிவிடும்
*இதற்கு கிடைக்கும் விலை*
' *மரணமில்லா பேரானந்தம்* '
- யோகி ஆடலரசன் ஐயா.
நிறுவனர்:- அகில உலக சைவ சன்மார்க்க முன்னேற்ற கழகம் மற்றும் வாகீசர் வாசி யோக சாகா கல்வி பயிற்சி மையம்.
திருக்கோவிலூர்.
Cell - 8675371212
Comments
Post a Comment