Posts

லிங்கோத்பவர் சிலை ஒவ்வொரு சிவன் கோவிலின் மூலவரின் பின்புறமும் காணப்படும். இக்கதை உணர்த்தும் உண்மை என்ன?

 கேள்வி :- லிங்கோத்பவர் சிலை ஒவ்வொரு சிவன் கோவிலின் மூலவரின் பின்புறமும் காணப்படும். இக்கதை உணர்த்தும் உண்மை என்ன?  பதில் : நான்் முன்பே கூறியது போல முன்னோர்கள் கூறிய கதைகளில் விஞ்ஞான உண்மை பொதிந்து இருக்கும். தீவீரவாதிகள் தங்களுக்குள் பேசிக்கொள்ள ஒரு மொழியை உருவாக்குவார்கள். வேறு ஒருவருக்கும் அது புரியாது. அது போலவே இறை தேடுதலில் தீவீரவாதிகளாகிய ஞானிகளும் , தாம் அறிந்த இறை ஞானத்தை பகிர்ந்து கொள்ள பாடல் ,கதை மூலம் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தனர். இது இன்னொரு தீவீரவாதிக்கு மட்டுமே புரியும்.  இக்கதையில் வரும் ப்ரம்மா என்பவர்கள், போலி மதவாதிகள். ப்ரம்மா முடியைக் கண்டு விட்டேன் என்று கூறுவதைப் போல , போலி மதவாதிகளும் இறைவனைப் பார்த்து இப்போதுதான் பேசிவிட்டு வருகிறேன் என்று கூறுவார்கள். இக்கதையில் விஷ்ணு என்பவர் வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டிப் பார்ப்பதைப் போல , விஞ்ஞானிகள் பூமியைத் தோண்டித் தோண்டிப் பார்க்கின்றனர். தங்கள் கண்டுபிடிப்பின் மூலம் உலகை காப்பாற்றுவதாக கூறுகின்றனர்.இவர்களே காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவின் அவதாரங்கள் விஷ்ணு ,தன்னால் சிவனின் அடியை காண ம...

மரணமில்லாப் பெருவாழ்வை அடைய வழிமுறை

 ஒன்றும் செய்யாமல் "சும்மாயிரு" என்று சில ஞானிகள் சொல்கிறார்கள். சன்மார்க்கத்தில் ஜீவ ஒழுக்கம், பூத ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்றெல்லாம் பல்வேறு ஒழுக்க விதிகளை விதித்து ,வள்ளல் பெருமான் போன்ற மெய்ஞானிகள் அவற்றை செய்யச் சொல்கிறார்கள். நாங்கள் எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டுமா? அல்லது வள்ளலார் போன்ற விஞ்ஞானிகள் சொல்வதை செய்ய வேண்டுமா? இந்த குழப்பத்தை நீக்கி அருள வேண்டுகிறோம். யோகி ஆடலரசன் ஐயா அவர்களின் பதில் :-  சம்சார துக்க நிவர்த்தி ஆகிய "ஜீவன் முக்தியை" அடைய வேண்டுமானால் எதுவும் செய்யாமல் "சும்மா இருக்க" வேண்டும். ஆனால் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய வேண்டுமானால் ஜீவ ஒழுக்கம், கரண ஒழுக்கம், பூத ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்ற ஒழுக்க விதிகளை கடைபிடித்து அசுத்த தேகத்தை, சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான ஒளி தேகமாக மாற்றம் அடையச் செய்ய வேண்டும்.  இதில் சோம்பேறி தனம் உள்ள சாதகர்கள் ஜீவன் முக்தியை அடைய பாடுபடுகிறார்கள். அவர்கள் வீட்டை . துறந்து துறவியாகி குளிக்காமல், நல்ல உடை உடுத்தாமல், பிச்சை எடுத்து வாழ்ந்து ஜீவன் முக்தியை அடைகிறார்கள். அவ...

யோக விஞ்ஞானம் வாசியோகம்

Image
 யோக விஞ்ஞானம் கேள்வி :- வாசியோக பயிற்சிகள் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் சிறிது விளக்க வேண்டுகிறோம்  பதில் :- இயற்கையை, அதன் இயங்கும் முறைகளை முற்றிலுமாக ஆராய்ந்து உணர்ந்த விஞ்ஞானிகளே மெய்ஞானிகளாகும்.அவர்கள் கண்டறிந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பு பிராணசக்தியாகும்.  இந்த பிரபஞ்சத்தை இயக்கும் அதே சக்திதான் பிரபஞ்சத்துள் இருக்கும் அனைத்து படைப்புகளையும் இயக்குகிறது.அதே சக்திதான் தனிம உலகையும்,தாவர உலகையும், விலங்கு உலகையும் இயக்குகிறது.  எப்படி மின்சாரம் என்பது Heater, AC,fan,iron box,car, tubelight போன்ற எல்லா கருவிகளையும் இயக்க வல்லதோ அவ்வாறே அந்த படைப்பு சக்தியே ஒவ்வொரு உயிரினத்துக்குள்ளும் இருந்து அதை இயங்க வைக்கிறது. அவ்வாறே நம் உடலிலும் அந்த உயிர்சக்திதான் நம்மை இயங்க வைக்கிறது என்பதை மிகப்பெரும் விஞ்ஞானிகளான நம் மெய்ஞானிகள் கண்டறிந்தனர். அந்த உயிர்சக்தியை நம்முள் உருவாக்குவதற்கே சுவாசிக்கிறோம் .ஒவ்வொரு பொருளும் எரிவதற்கு Oxygen அவசியம் என்பதை 200 வருடங்களுக்கு முன்புதான் கண்டறிந்தனர்.ஆனால் அனைத்து உயிரினங்களும் சுவாசித்தலின் முலமாக Oxygenஐ சுவாசித்து ...

ஆனி அமாவாசை முன்னோர்களுக்கு பிண்டம் கொடுப்பது ஏன்?

 *பிண்டப்பிராதனம்* தகப்பனார் ,  பாட்டனார், முப்பாட்டனார், மூவரின் பெயர்களைக் கூப்பிட்டு பிண்டம் கொடுக்கப்படுவது  காரணம். குழந்தை பிறக்க மூலகாரணமான பொருள், ஆணிடமுள்ள சுக்கிலம்'' எனப்படும் தாதுவாகும். இந்த தாதுவில் எண்பத்து நான்கு அம்சங்கள் உள்ளன ;  அதில் இருபத்துஎட்டு அம்சங்கள் , அந்த மனிதன் உட்கொள்ளும் உணவு , மற்றும் அருந்தும் நீர் முதலியவற்றால் உண்டாவை ; தந்தையிடமிருந்து இருபத்தியொரு அம்சமும்  பாட்டனாரிடமிருந்து பதினைந்து அம்சமும்  முப்பாட்டனாரிடமிருந்து பத்து அம்சமும்  நான்காம் மூதாதையிடமிருந்து  ஆறு அம்சமும்  ஐந்தாம் மூதாதையிடமிருந்து மூன்று அம்சமும்  ஆறாம் மூதாதையிடமிருந்து  ஒரு அம்சமும்.. என ஆறு தலைமுறையினரின் ஐம்பத்தியாறு அம்சங்கள் ஏழாம் தலை முறை மனிதனின் சுக்கிலத்தோடு தொடர்பு கொண்டவை ! இதில் அதிகமாக தங்கள் அம்சத்தை தங்கள் வாரிசுகளுக்குத் தருபவர்கள் , தகப்பனார் , பாட்டனார், முப்பாட்டனார் ஆகிய மூவரே! எனவே தான் , திவசத்தின் போது இந்த மூவரின் பெயர்களைக் கூப்பிட்டு பிண்டம் கொடுக்கப்படுவது வழக்கத்திலுள்ளது. அனைவருக்கும் எம்பெருமானி...

வாகீசர் தசகாரிய வாசியோகம்

குரு ஆடலரசன் ஐயாவின் முகநூல் பக்கத்தில் உள்ள முழு காணொளிகள்  https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/435834736840995/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/435842763506859/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/436507316773737/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/437650306659438/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/437650306659438/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/438451016579367/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/440014269756375/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/444118536012615/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/455508444873624/?mibextid=NzXCef https://www.facebook.com/Vaagishavaasiyogacenter/videos/782748475436077/?mibextid=NzXCef

பிரபஞ்ச நாயகன் சிவபெருமானை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

 பிரபஞ்ச நாயகன் சிவபெருமானை பற்றி அறிந்து கொள்ளுங்கள்  1. உலகத்துக்குக் கருத்தா யாவர்? சிவபெருமான். 2. சிவபெருமான் எப்படிப்பட்டவர்? நித்தியரும், சருவவியாபகரும், அநாதிமலமுத்தரும், சருவஞ்ஞரும், சருவகர்த்தாவும், நித்தியானந்தரும், சுவதந்திரருமாய் உள்ளவர். 3. நித்தியர் என்பது முதலிய சொற்களுக்குப் பொருள் என்ன? நித்தியர் = என்றும் உள்ளவர்; சருவவியாபகர் = எங்கும் நிறைந்தவர்; அநாதிமலமுத்தர் = இயல்பாகவே பாசங்களின் நீங்கினவர்: சருவஞ்ஞர் = எல்லாம் அறிபவர்; சருவகர்த்தா =எல்லாம் செய்பவர்; நித்தியானந்தர் = என்றும் மகிழ்ச்சியுடையவர்; சுவதந்திரர்=தம்வயமுடையவர். 4. சிவபெருமான் செய்யும் தொழில்கள் எவை? படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துமாம். 5. இவ்வைந்தொழிலுஞ் சிவபெருமான் செய்வது தம் பொருட்டோ பிறர் பொருட்டோ? தம்பொருட்டன்று; ஆன்மாக்களாகிய பிறர் பொருட்டே. [ஆன்மா, பசு, புற்கலன் என்பவை ஒரு பொருட் சொற்கள்.] 6. படைத்தலாவது யாது? ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல். 7. காத்தலாவது யாது? தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன் போகங்களை நிறுத்தல். 8....

ஏன் இந்த உலகம், இங்கே ஏன் இத்தனை துன்பங்கள்? எதற்காக? அதன் நோக்கந்தான் என்ன?"

 எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம்? ஏன் இந்த உலகம், இங்கே ஏன் இத்தனை துன்பங்கள்? எதற்காக? அதன் நோக்கந்தான் என்ன?" நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விசயம்,"இந்த உலகம் இருப்பது நீங்கள் ஞானம் (liberate) அடைய வேண்டும்" என்பதற்காகவே "ஏன் இந்த உலகம், இங்கே ஏன் இத்தனை துன்பங்கள்? எதற்காக? அதன் நோக்கந்தான் என்ன?" என்று பலமுறை உங்கள் மனதில் கேள்வி எழுந்திருக்கும். "நாம் எதற்காக இருக்க வேண்டும். வாழ்க்கை துன்பகரமானது என்கிறபோது அதை வாழ்வதன் நோக்கம் என்ன?  ஒரு கடவுள் இருக்கிறார் என்றால்  இந்தப் பெருங்குழப்பத்தை அவர் போக்க வேண்டியது தானே. இந்தத் துன்பகரமான வாழ்க்கையை - அதன் துயரத்தை ஏன் அவரால் துடைத்தெறிய முடியவில்லை? அவர் ஏன் வலுக்கட்டாயமாய் மக்கள் அதை வாழும்படி செய்ய வேண்டும்?" என்கிறார்கள். யோகா இதற்கான பதிலை வைத்திருக்கிறது " ஒரு ஜீவாத்மாவிற்கு வாழ்க்கை மூலம் அனுபவத்தைத் தந்து அவனை விடுபடச் செய்வதே நோக்கம்" என்கிறார் பதஞ்ஜலி. அது ஒரு பயிற்சி. துன்புறுதல் ஒரு பயிற்சி, காரணம் துன்புறாமல் பக்குவப்படுவது சாத்தியமில்லை. அது தீ மாதிரி, தங்கம் தூ...