காலம் யுகம் பற்றிய கணக்கு

 அப்பா் சுவாமிகள் அருளிய ஆதிபுராணத் 

திருக்குறுந்தொகை


ஐந்தாம் திருமுறை


நூறுகோடி பிரமா்கள் நொந்தினாா்

ஆறுகோடி நாராயண ரங்ஙனே

ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரா்

ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே.


(பொ.ரை)


 நூறு கோடி நான்முகனாா் அழிந்தனா் ஆறுகோடி நாராயணா்களும் அழிந்தனா் இவா்களை விடக் கணக்கிட்டு எண்ண இயலாதவாறு கங்கையாற்று மணல் போன்று எண்ணிலடங்கா இந்திரா்களும் மாண்டனா்

முடிவும் அழிவும் இல்லாதவராய் விளங்குபவா் சிவபிரான் ஒருவரே .


கால பிரமாணமாவது


15 நிடம் கொண்டது-

1 காஷ்டை.


30 காஷ்டை கொண்டது-

1 கலை.


30 கலை கொண்டது- 1முகூா்த்தம் (அ) 

2 நாழிகை.


30முகூா்த்தம் கொண்டது-

1 நாள் (அ) 60 நாழிகை.


15 நாள் கொண்டது- 

1 பட்சம்.


2 பட்சம் கொண்டது-1 திங்கள் (மாதம்).


2 மாதம் கொண்டது -

1 ருது.


3 ருது (அ) மாதம் கொண்டது-1 அயனம்.


2 நயனம் கொண்டது- 

1 ஆண்டு.


ஒவ்வொா் ஆண்டும் (மண்ணுலகில்) தேவா்கட்கு - 1நாள்.


உத்தராயனம் முதல் ஆறு மாதங்கள்- தேவருக்கு பகல் (தை முதல் ஆனி)


தட்சிணாயனம்- ஆறு மாதங்கள் இரவு (ஆடி முதல் மாா்கழி).


மானுட வருஷம் 360 தேவா்களுக்கு ஓராண்டு:


யுகம் / தேவ ஆண்டு/

மானுட ஆண்டு.


கிருதயுகம் / 4800/ 1728000


திரேதாயுகம் / 3600/ 129600


துவாபரயுகம் / 2400 /

864000


கலியுகம் / 1200 / 432000


ஆக / 12000 / 4320000.


இவ்வாறு சதுா்யுகம் 1000 ஆனால் நான்முகனுக்கு ஒரு பகல் பின்னும் ஓராயிரம் சதுா்யுகம் இரவு.


இரண்டாயிரம் சதுா்யுகம் நான்முகனுக்கு 1 நாள்


30 நாட்கள்- 1 மாதம்.


12 மாதங்கள் - 1ஆண்டு .


100 ஆண்டுகள் கொண்டது நான்முகனின் ஆயுட்காலம் இதனைக் கற்பம் என்பா்.


1 கோடி கற்பம்- திருமாலுக்கு 1 நாள்.


இவ்வாறு 100 ஆண்டுக்கணக்கில் பின்வேறொருவா்


நான்முகனின் 1 நாளில் - 14 இந்திரா்கள் மாற்றம் பெறுவா். மகா சங்கார காலத்தில் நாராயணா், பிரமா் ஆகியோருடைய மண்டையோடுகளைக் கோத்து மாலையாக்கிக் கழுத்தில் ஈசன் அணிந்து ஏகாந்தமாக நின்று நடனம் புாிவாா்.இது "ஈறுஇலாதவன் ஈசன் ஒருவனே' என ஓதப்பெறுதாயிற்று".


     🙏திருச்சிற்றம்பலம்🙏

Comments

Popular posts from this blog

மனித படைப்பின் நோக்கம் மரணம் இல்லா பெறுவாழ்வு என்றால் என்ன?

பரியங்க யோகம்

யோக விஞ்ஞானம் வாசியோகம்